விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.பொதுவாக விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் மிகவும் சுவாரசியமாக இருந்து வருவதால் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது என்றும் கூறலாம் அந்த வகையில் பிக்பாஸ்க்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் மிகவும் சுவாரசியமாக இருந்து வருகிறது மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் மன உளைச்சலில் இருந்து வெளி வருவதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் பணியாற்றி வரும் அனைவருக்கும் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு கடந்த மூன்று வருடங்களாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் தான் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது அந்த வகையில் இந்த சீசனின் வின்னராக ஸ்ருதிகா வெற்றி பெற்றார். மேலும் முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி ஆகியோர்கள் வெற்றி பெற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த குக்குகளுக்கு எந்தெந்த கோமாளிகள் வருவார்கள் என்பதை தேர்ந்தெடுப்பது, மற்றும் என்ன சமையல் சமைக்க போகிறார்கள் என்பதை மிகவும் சஸ்பென்ஸ்சாக நடுவர்கள் கூறுவது போன்றவை மிகவும் இன்ட்ரஸ்ட்டாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 கலந்து கொண்ட ராகுல் தாத்தா சமீப பேட்டி ஒன்றில் உண்மையை உடைத்துள்ளார்.
அதாவது ‘இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முதல் நாளை நாங்கள் என்ன சமைக்க வேண்டும் என்பதை எங்களுக்கு மெசேஜ் செய்து விடுவார்கள்’ என இவர் கூறிய தகவல் வைரலாக அனைத்து ரசிகர்களும் இதை தான் இத்தை நாட்களாக நம்பிக்கொண்டு இருந்தோமா என கோபத்தில் இருந்து வருகிறார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஸ்ருதிகா இதனை மறுத்து விட்டார் நாங்கள் என்ன சமைக்கிறோம் என்பதை எங்களுக்கு முன்கூட்டியே கூற மாட்டார்கள் செட்டிற்க்கு போன பிறகுதான் அதனைப் பற்றி கூறுவார்கள் என்றும், தாங்கள் எப்படி வித்தியாசமாக சமைக்கலாம் என சிந்தித்து சமைப்போம் எனவும் கூறி வருகிறார். பிறகு கடந்த சீசன்களில் இந்த குக்குகளுக்கு இந்த கோமாளிகள் தான் என முன்கூட்டியே கூறிவிடுவார்கள் எனவும் கூறப்பட்டது.