ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவி குக் வித் கோமாலி பிரபலம்.! வைரலாகும் ப்ரோமோ.!

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானாளும் அந்நிகழ்ச்சியில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் மிகவும் என்டர்டய்மெண்டாக இருப்பதால் ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று தரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் கோமாளிகள் தங்களது உயிரைக் கொடுத்து பல புதிய காமெடிகளை கூறி ரசிகர்களை  மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிய உள்ள நிலையில் நிகழ்ச்சியின் பைனலில் சிறப்பு விருந்தினராக சிம்பு மற்றும் என்ஜாய் என்ஜாமி பாடலை பாடியவர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கிறார்கள்.

இந்நிலையில் அஸ்வின் விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மாறியுள்ளார்.அதாவுது பல திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சியில் ஜீ தமிழ் பிரைன் லாங்குவேஜ் என்ற ப்ரோமோவில் அஸ்வின் நடித்துள்ளார்.

aswin 3
aswin 3

இதனை பார்த்த ரசிகர்கள் அஸ்வின் விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு மாறிவிட்டாரா என்ற பல கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment