முதல் வாரமே அனைத்து சீரியல்களையும் ஓவர்டேக் செய்த செல்லம்மா சீரியல்.!

0
vijay-tv--4
vijay-tv--4

இல்லத்தரசிகள் முதல் வீட்டில் உள்ள குழந்தைகள் உள்ள அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் வகையில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்றுவருகின்றன. அதில் விஜய் டிவி முன்னிலையில் இருக்கிறது. என்னதான் சன் டிவி தொலைக்காட்சியில் பல சீரியல்கள், ஷோக்கள் பல ஆண்டுகளாக ஒளிபரப்பி வந்தாலும் லேட்டஸ்ட் ட்ரெண்ட்க்கு ஏத்தமாதிரி சீரியல் மட்டும் ஷோக்களை விஜய் டிவி மிகவும் பரபரப்பாக கொடுத்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி சீசன்2, மௌனராகம் சீசன் 2, காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், தமிழும் சரஸ்வதியும், தென்றல் வந்து என்னை தொடும், போன்ற உட்பட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பி வருகின்றன. இதில் வேலைக்காரன், செந்தூரப்பூவே, சீரியல் சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வேலைக்காரன் சீரியலுக்கு பதிலாக செல்லம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கணவன் தன்னை தனியே தவிக்க விட்டு சென்ற பிறகு பெண்பிள்ளையை வைத்து போராடும் வாழ்க்கையை கதையாக இந்த செல்லமா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை அன்ஷிதா அக்பர்ஷா நடித்து வருகிறார். ஒற்றைத் தாயின் வலியை பலவிதமாக விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் வெளிப்படுத்தியது. ஆனால் செல்லம்மா சீரியல் முதல் வாரத்திலேயே அசத்தலான சாதனையை படைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊரில் தன்னிடம் தப்பா நடக்க நினைத்தவரிடம் தன் குழந்தையுடன் தப்பி சென்னை வருகிறார். அப்போது கணவனை தேடும் போது கணவன் விநாயகம், மாணிக்கம் என்ற பெயரில் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதைப்பார்த்த செல்லம்மா ஏமாற்றி விட்டதாக கோபம் விடுகிறார். உன் முன்னாடி நன்றாக வாழ்ந்து காட்டுவேன் என்று சவால் விட்டு வருகிறார். வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். செல்லம்மா

எனவே, ஆரம்பத்திலேயே அதிரடி ட்விஸ்ட் கொடுத்துவரும் செல்லம்மா சீரியல் அடுத்து செல்லமா என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் டிஆர்பி ரேட்டிங் ம 3.8 பாய்ண்டயை செல்லமா சீரியல் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய நேரங்களில் பார்க்கப்படும் சீரியலில் நம்பர் ஒன் சீரியலாக செல்லமா சீரியல் இடத்தை பெற்றுள்ளது.