17 வயதிலேயே சூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் விஜய் டிவி பிரபலம்.! அட இதென்ன வம்பா போச்சு

சமீபகாலமாக பலரும் யூடியூப் சேனலை தொடங்கி பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அந்த லிஸ்டில்  ஒரு சிலர் மட்டுமே மக்களுக்கு தேவைப்படும் கேள்விகளைக் கேட்கிறார்கள் ஒரு சிலர் எப்படியாவது பார்க்க வேண்டும் என ஆபாசமாக கேள்வியை கேட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பிரபலங்களிடம் வரம்பு மீறி கேள்வி கேட்பதும் அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவிக்காமல் ஏதோ ஒரு சர்ச்சையான பதிலை கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு மைக்கை தூக்கி கொண்டு பொதுமக்களிடம் இரட்டை அர்த்தத்தில் கேள்வி கேட்டு வந்தார்கள்.

ஆனால் அப்பொழுது ஒரு பிரச்சனை வெடித்ததால் பலரும் தற்போது கேள்வி கேட்பதை குறைத்துக் கொண்டார்கள்.  அந்த வகையில் யூடியூப் சேனல்களில் பிரபலங்களை அழைத்துவந்து திருமணமான நடிகர்கள் என்று கூட பார்க்காமல் விவகாரமான கேள்விகளைக் கேட்டு அவர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சிறுவயது நடிகைகளிடம் கூட வயதுக்கு மீறிய கேள்விகளை கேட்டு  சிக்கலில் சிக்க வைத்து விடுகிறார்கள்.  அந்த வகையில் ராட்சசன் திரைப்படத்தில் சிறுபிள்ளையாக நடித்து வந்த ரவீனா என்ற பிரபலத்திடம் பிரபல யூடியூப் சேனல் ஒன்று கிஸ் மி மேரி மி என்ற பெயரில் கேள்வி கேட்கிறார்கள்.

அப்படிதான் ரவீனாவிடம் பல கேள்விகளை கேட்டுள்ளார்கள் அப்பொழுது சூர்யாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அஜித்தை முத்தமிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சூர்யா ஒரு மிகப்பெரிய நடிகர் அவர் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது அதெல்லாம் தெரிந்தும் தான் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியது. மற்ற சிறு பெண்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என நினைக்கத் தோன்றுகிறது.

இந்த நிலையில் ரவீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரம்புக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் மௌனராகம் 2 சீரியலிலும் நடித்து வருகிறார்.

Leave a Comment