இந்த வார எமிலினேஷனில் இருக்கும் பெரிய டிவிஸ்ட்.. வனிதாவுக்கே டஃப் மாயா.!

Bigg Boss season 7 Elimination: கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் ஏழாவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு சீசர்களை விட ஏழாவது சீசன் பல மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

6 சீசன்கள் சுமாரான வரவேற்பு கிடைத்ததால் ஏழாவது சீசன் வேற லெவலில் இருக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளனர். அப்படி முதலில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாய்ஸ் என்று இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆரம்பத்திலேயே இரு குழுகளாக பிரிந்து போட்டியாளர்கள் போட்டி போட தொடங்கியுள்ளனர்.

மேலும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இந்த 7சீசன் போட்டியாளர்கள் பயங்கர ஸ்போட்டிவ்வாக இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பொதுவாக முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது ஆனால் இந்த சீசன் முதல் வாரம் மாடல் அழகி அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரை அடுத்து எழுத்தாளர் பவா செல்லதுரை உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பிக் பாஸ் வீட்டை விட்டு சென்று இருக்கிறார்.

தற்பொழுது 16 போட்டியாளர்களுடன் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விசித்ரா, ஜோவிகா, மாயா, பிரதீப், பூர்ணிமா, அக்ஷயா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர். வழக்கம்போல ரசிகர்களும் ஓட்டுகள் போட்டு வரும் நிலையில் ஆனால் பிக் பாஸ் பெரிய டூரிஸ்ட் வைத்துள்ளார். ஏனென்றால் ஒரே வாரத்தில் அனன்யா அடுத்ததாக பவா செல்லதுரை இரண்டு பேருமே வெளியேறியிருப்பதனால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என கூற கூற போகிறார்.

மறுபுறம் இந்த சீசனில் மாயா தான் அதிகமாக புறம் பேசி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருப்பதனால் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆவேசமாக காத்து வருகிறார். எனவே அடுத்த வாரம் கேப்டன் நம்மில் ஒருவராக இருக்க வேண்டும் என விஷ்ணு, பிரதீப்பை கூட்டணி சேர்த்துள்ளார். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்கள் மத்தியில் குறைவாக வாக்குகள் பெற்றாலும் மாயா வெளியேற வாய்ப்புகள் மிகவும் குறைவு என கூறப்படுகிறது.