விதியை மீறிய போட்டியாளர்களுக்கு தூங்கவிடாமல் ஆப்பு வைத்த பிக்பாஸ்.!

0
bigg boss 24
bigg boss 24

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியின் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஆனால் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் கடுமையாக சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாக இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் ஹவுஸ் மேட்ஸ்களின் தூக்கத்திற்கு பிக்பாஸ் வேட்டு வைத்துள்ளது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் பொதுவாக நடிகர் கமலஹாசன் அவர்கள் சொல்லும் அறிவுரையை போட்டியாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அதனை மாற்றிக் கொள்வது வழக்கம்.

மேலும் இதுவரையிலும் அப்படி தான் நடைபெற்று வந்தது ஆனால் இந்த சீசனில் சிலர் கமலஹாசன் அவர்கள் அறிவுரை கூறியும் கண்டித்தும் அதனை மாற்றிக் கொள்ளாமல் இருந்தார்கள். எனவே இதற்கு மேல் விதியை மீறி பிக்பாஸ் வீட்டில் யாராவது நடந்து கொண்டால் நானே ரெக்கார்ட் கொடுத்து உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவேன் என கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

அந்த வகையில் தொடர்ந்து டாஸ்க்கள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த வார லக்சூரி பட்ஜெட் டாஸ்காக ஸ்வீட் பேக்கரி டாஸ்க் நடைபெற இருக்கிறது என்று இந்த மூன்றாவது எபிசோடில் தெரிய வருகிறது .

அதில் அமுதவாணன் டீமின் ஸ்வீட் பேக்கரியின் பெயர் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்றும் அசீம் உள்ள டீம்மின் பெயர் தேனடை என்றும் வைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஸ்வீட்ஸ் பேக்கரிகளை சேர்ந்தவர்களும் பலகாரங்களை செய்து ஆர்டர்களை அனுப்ப வேண்டும் அந்த பேக்கரி 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக பேக்கரியில் உள்ள பொருட்கள் மற்றும் கல்லாய் பெட்டிகளை பாதுகாக்க வேண்டியது பேக்கரிக்காரர்களின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது இதனால் பகலில் மட்டும் என்று இரவிலும் போட்டியாளர்கள் தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் இவ்வாறு ஒரு டாஸ்கை அறிமுகப்படுத்தி உள்ளது.