விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கிட்டத்தட்ட 31 நாட்களை கடந்து விட்டது, பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக கேம்ஸ் தான் கொண்டிருக்கிறது.
BB3 Unseen Clip Day30 (7/9) pic.twitter.com/JwV0Pzn31n
— AwwHacker (@AwwHacker) July 24, 2019
அந்த வகையில் தற்போது போட்டியாளர்களுக்கு கிராமத்து டாஸ்க் கொடுத்துள்ளார்கள் இந்த டாஸ்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இரண்டு கிராமங்களாக பிரிந்து நடித்து வருகிறார்கள், இதில் தர்ஷன் மற்றும் ஷெரின் கணவன் மனைவி போல் நடித்து வருகிறார்கள், டாஸ்க் கொடுத்து நடிக்க சொன்னால் இருவரும் கணவன் மனைவி போல் வாழ்கிறார்கள், தர்ஷன் மடியில் ஷெரின் உட்கார்வதும், தர்ஷன் அவரை கொஞ்சுவதும் அலப்பறை செய்கிறார்கள்.
BB3 Unseen Clip Day30 (8/9) pic.twitter.com/qzXWxNR4uA
— AwwHacker (@AwwHacker) July 24, 2019
தர்ஷனுக்கு அம்மாவாக மீரா மிதுன் நடிக்கிறார் அவர் தர்ஷனிடம் இது ஆடி மாசம் டா நானே ஆடி மாசம் முடிந்ததும் சேர்த்து வைக்கிறேன் எனக் கூறுவது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது, மேலும் தர்ஷன் மீரா மிதுனிடம் பூ வச்சு விடுவதில் எதுவும் வராது எனக் கூறுகிறார். இதை பார்த்த நெட்டிசன் என்ன டா நடக்குது இங்க என கமென்ட் செய்து வருகிறார்கள்.