சினிமாவை மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய புருஷனுக்காக போராடும் கண்ணம்மா.! பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடு இதோ..

bharathi kannama 3
bharathi kannama 3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் தற்பொழுது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஹாஸ்பிட்டல் உள்ளே இருக்கும் நிலையில் இவர்களை காப்பாற்றுவதற்காக கதவிலிருந்து போலீசார்கள் உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள். மேலும் லட்சுமி ஹேமா இதுவரையும் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் போலீசார்கள் தீவிரவாதிகளை நெருங்கும் பொழுது அந்த இரண்டு குழந்தைகளையும் சுட்டு விடலாம் என அந்த கூட்டத்தின் தலைவர் முடிவெடுத்துள்ளார். மேலும் கையில் துப்பாக்கி வைத்திருப்பவர் தன்னுடைய அம்மா சொன்னதை நினைத்துப் பார்க்கிறார். உன் கூட பொறந்த பொறப்பா இருந்தா, நம்ம ரத்தமா இருந்தா இப்படி செய்வியா என நினைத்துப் பார்க்கிறார்.

இதனால் அந்த தீவிரவாதிகளின் கூட்டத்தில் ஒருவரே அவருடைய தலைவரை துப்பாக்கியால் சுட்டு கொள்கிறார்கள். அதன் பிறகு போலீசார்களும் தீவிரவாதிகளை கைது செய்த பிறகு மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள் அங்கு பாரதி கண்ணம்மாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு தான் தெரிகிறது பாரதியின் மேலே வெடிகுண்டு இருக்கிறது என்பது இதன் காரணமாக பாரதி கண்ணம்மாவை வெளியே போ என கூறுகிறார். ஆனால் கண்ணமா  செத்தாலும் உங்கள் கூடவே சாகிறேன் எனக்கூறி பாரதியை கட்டிப்பிடிக்கிறார். அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணம்மா இருந்து வரும் நிலையில் அந்த நேரத்தில் இவருக்கு போன் ஒன்றை கிடைக்கிறது.

பிறகு அந்த போன் மூலம் கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு வீடியோ கால் செய்து அருகில் இருக்கும் போலீசாரிடம் பாம் ஒயரை எப்படி கட் பண்ண வேண்டும் என கேட்கிறார். எப்படியோ கண்ணம்மா பாரதியை காப்பாத்த இருவரும் தப்பித்து விடுகிறார்கள். இவ்வாறு பாரதி இந்த அளவிற்கு கண்ணம்மாவை சந்தேகப்பட்டாலும் கண்ணம்மா பாரதியை காப்பாற்றியதை நினைத்து பாரதி வருத்தப்படுகிறார்.