விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மலையாளத் தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது குளோபல் வில்லேஜர்ஸ் சீரியலை தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
மேலும் இந்த தொடரில் அருண் கதாநாயகராகவும், ரோஷினி ஹரிப்பிரியன் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது வரையிலும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஏராளமான நடிகர், நடிகைகளின் மாற்றங்களும் நடந்துள்ள நிலையில் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொண்டு தங்களுடைய நல்ல ஆதரவை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கதாநாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரி பிரியான் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ள நிலையில் தற்பொழுது மினுஷா என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த சீரியலில் அதிரடியான கதைகளும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தீவிரவாதிகள் மருத்துவமனையை கைப்பற்ற ஒரு பக்கம் போலீஸார்கள் அவர்களிடம் இருந்து மக்களை எப்படியாவது பத்திரமாக மீட்க வேண்டும் என போராடி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வார எபிசோடில் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் பாரதி மீது வெடிகுண்டை தீவிரவாதிகள் கட்டியுள்ளார்கள். இதனை தெரியாத கண்ணம்மா பாரதியை காப்பாற்ற வேண்டும் என முயற்சிக்க பாரதி கண்ணம்மா இங்கிருந்து போய் விடு என் மீது பாம் இருக்கிறது என கூறுகிறார் உடனே கண்ணம்மா நானும் உங்களோடு இறக்கிறேன் என அவரை கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.
இவ்வாறு பாரதி மற்றும் கண்ணம்மா இவர்களுடைய வாழ்க்கை இதில் முடிந்து விட பிறகு லட்சுமி மற்றும் ஹேமாவை வைத்துதான் இனி வரும் கதைகளாம் உருவாக இருக்கிறது. இவ்வாறு இது குறித்து ரசிகர்கள் இது சரியான முடிவு கிடையாது பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மை தெரிய வேண்டும் என கூறி வருகிறார்கள்.