உடல்நிலை சரியான நிலையில் மீண்டும் பாரதிக்கு அதிர்ச்சிக் கொடுத்த வெண்பா.! இதெல்லாம் ஒரு பொழப்பா என பாரதி கண்ணம்மா சீரியலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

0
bharathi-kannama-serial
bharathi-kannama-serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்பொழுது ஹேமா அம்மா என பாரதி வரைந்து கொடுத்த போட்டோவை கையில் வைத்துக் கொண்டு இனி யாரிடமும் சண்டை போட மாட்டேன் ஒழுங்கா சமத்தா இருப்பேன் என சத்தியம் செய்த நேரத்தில் அங்கே சௌந்தர்யாவும் அகிலும் வர அம்மா இவ்வளவு அழகா இருக்காங்க அவங்க மட்டும் உயிரோட இருந்தால் நாம எல்லோரும் ஒண்ணா சந்தோஷமா இருக்கலாம் என சொல்கிறார்.

பிறகு கேமா கீழே போனவுடன் சௌந்தர்யா பாரதி சொன்னது பொய்யின்னு தெரிஞ்சா ஹேமா அவனை வெறுத்திடுவான் அது மட்டும் நடந்திட கூடாது என வருத்தப்படுகிறார் இதனைத் தொடர்ந்து லட்சுமி கண்ணம்மாவிடம் பாரதி தனக்காக ஸ்கூலில் பேசிய விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார் சீக்கிரம் நாம எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்டில் இருப்போம் என கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சாந்தி வெண்பா ரூமில் ஆளில்லாமல் இருக்க போன் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து பதறிப் போய் எடுத்து பாரதிக்கு போன் போட்டு என்ன ஆச்சு என்ன விசாரிக்க பாரதி நடந்த விஷயங்கள் எல்லாம் கூறுகிறார் பிறகு வீட்டில் யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது என கூறுகிறார் பிறகு ஷர்மிளா இந்த இடத்திற்கு வந்து வெண்பா எங்கே என கேட்க சாந்தி பிரண்ட் வீட்டிற்கு போய் இருக்காங்க என சொல்லி சமாளித்து விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெண்பாவிற்கு உடல்நிலை சரியாக பாரதி மிகவும் மகிழ்ச்சி அடைகிறார் மீண்டும் என்னை கல்யாணம் பண்ணிக்குவியா மாட்டியா என வெண்பா பாரதியிடம் கேட்க அதிர்ச்சி அடைகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

இவ்வாறு வெண்பா எப்படியாவது தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தால் பாரதி தன்னை ஏற்றுக் கொள்வார் என முயற்சி செய்த நிலையில் பாரதி தன்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் பாரதி அடுத்ததாக என்ன சொல்வார் என வெண்பா காத்திருக்கிறார். இவ்வாறு எவனோ ஒருவனுக்கு உருவான குழந்தையை தன்னுடைய குழந்தை என எப்படி பாரதி ஏற்றுக்கொள்ள முடியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.