மகனாக இருந்து கண்ணம்மாவின் அம்மாவிற்கு திதி கொடுத்த பாரதி.! பாராட்டும் ஊர் பொதுமக்கள்..

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் தற்பொழுது பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் அரங்கேரி வருகிறது.

அதாவது தற்பொழுது பாரதி கண்ணம்மா தன்னுடைய இரு மகள்களுடன் கிராமத்தில் இருந்து வருகிறார்கள். எப்படியாவது கண்ணம்மாவின் மனதை மாற்றி பாரதி தன்னுடைய குடும்பத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார். இதற்கு உறுதுணையாக லட்சுமியும் இருந்துவரும் நிலையில் என்ன முயற்சித்தும் ஹேமாவின் மனதை மாற்ற முடியவில்லை .

அவர் கண்ணம்மாவுடன் இருந்து வருகிறார் மேலும் தற்பொழுது லட்சுமி பாரதியுடன் ஜாலியாக இருந்து வரும் நிலையில் இரவு நேரத்தில் ராட்டினம் ஒன்று நிற்கிறது அதில் லட்சுமி சுத்த வேண்டும் எனக் கூற அந்த ராட்டினத்தின் ஓனர் முடியாது என கூறுகிறார். பிறகு பாரதி தன்னிடம் இருந்த 500 ரூபாய் பணத்தை கொடுத்து சுற்ற வேண்டும் எனக் கூற பிறகு லட்சுமியை வைத்து அந்த ராட்டினத்தை செய்கிறார்கள்.

இதனை கண்ணம்மா மற்றும் ஹேமா பார்த்துக் கொண்டிருக்க பிறகு பாரதி எனை ஏற்றுக் கொண்டால் யார் வேணாலும் ராட்டினத்தில் சுத்தலாம் எனக் கூற அப்பொழுதும் ஹேமாவின் மனம் மாறவில்லை இதனை அடுத்து மறுபுறம் இன்று கண்ணம்மா அம்மாவின் நினைவு நாள் என்பதால் பாரதி அவருடைய நினைவு நாளை கொண்டாடுகிறார்.

எனவே கண்ணம்மாவின் வீட்டிற்கு எதிரில் பெரிய பந்தல் ஒன்றை போட்டு அதில் கண்ணம்மா அம்மாவின் புகைப்படத்தை வைத்து ஊரில் இருப்பவர்களுடன் அஞ்சலி செலுத்துகிறார் மேலும் பாரதியை திதி கொடுப்பதற்காக கண்ணம்மா மற்றும் அவருடைய அப்பாவையும் அழைக்க கண்ணம்மா வர மறுக்கிறார். பாரதி தனியாக திதி கொடுக்க அப்பொழுது 18 வருடங்கள் கழித்து இவ்வாறு இவருக்கு ஒரு மருமகனாக திதி கொடுக்க நினைத்தது பெரிய விஷயம் என பாராட்டுகிறார்கள். உடனே கண்ணம்மாவும் பாரதியின் பக்கத்தில் உட்கார்ந்து தன்னுடைய அம்மாவிற்கு திதி கொடுக்கிறார்.

Leave a Comment