புருஷன் என்று கூட பார்க்காமல் கையைப் பிடித்து இழுத்தான் எனக்கூறி பஞ்சாயத்தை கூட்டி அவமானப்படுத்திய கண்ணம்மா.! கூனிக்குறுகி நின்ன பாரதி..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் விறுவிறுப்பாக பல சுவாரசியமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் பிறகு ஒரே கதையை வைத்து உருட்டி வந்ததால் எப்பொழுது இந்த சீரியல் முடியும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் மூலம் கண்ணம்மா எந்த தவறும் செய்யவில்லை எனவும் ஹேமா, லக்ஷ்மி தனக்கு பிறந்த குழந்தைகள்தான் என தெரிந்து கொண்டான். இப்படிப்பட்ட நிலையில் வெண்பாவம் ஜெயிலில் இருந்து வரும் நிலையில் கண்ணம்மாவை நினைத்துக் கொண்டு அவருடன் ஜெயிலில் இருக்கும் பெண்களை துன்புறுத்தி வருகிறார்.

இதனை அடுத்து கண்ணம்மா யாருக்கும் தெரியாமல் தன்னுடைய அப்பாவின் பூர்விகா ஊருக்கு வந்துள்ள நிலையில் அங்கு தன்னுடைய மகள்களை பள்ளியில் சேர்த்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் பாரதி எப்படியாவது கண்ணமாவை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கண்ணம்மாவின் மாமா துணையுடன் கிராமத்திற்கு வருகிறார் .

பிறகு கண்ணம்மாவை பார்த்தவுடன் ஓடி சென்று பேசும் நிலையில் என்னையும் என்னுடைய மகள்களையும் நிம்மதியாக இருக்க விடுங்க எனக் கூற பிறகு பாரதி போக முடியாது என கண்ணம்மாவின் கையை பிடித்து இருக்கிறார். எனவே கண்ணம்மாவிற்கு கோபம் வர அது ஊர் பிரச்சனையாக மாறுகிறது எனவே பஞ்சாயத்தில் புருஷன் பொண்டாட்டி சண்டையை வீட்டிலேயே வச்சுக்கங்க என கூறிவிட்டு பிறகு பாரதியை ஒழுங்கு மரியாதையாக உங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என தீர்ப்பு வழங்குகிறார்கள்.

இவ்வாறு பாரதியை அனைவரும் அசிங்கப்படுத்தியும் கூட கண்ணம்மா வாயை திறக்கவில்லை எனவே வேதனை உடன் பாரதி அதிர்ச்சியில் இருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாத காலங்களுக்கு மேலாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் எப்பொழுது இந்த சீரியல் முடியும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.

Leave a Comment