கண்ணம்மாவிடம் செருப்பால் அடிக்காத குறையாக மொக்கை வாங்கிய வெண்பா.! இன்றைய எபிசோட்..

பல எதிர்பார்ப்புகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல் பாரதி கண்ணம்மா கடந்த சில வாரங்களாக கண்ணம்மாவின் பிறந்த நாளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. எட்டு வருடங்களாக அப்பாயாரென்று தெரியாமல் வளர்ந்து வந்த லட்சுமியிடம் எனது பிறந்தநாளன்று உன் அப்பாவை அறிமுகப்படுத்துகிறேன் என கண்ணம்மா கூற கூரிய நாளில் இருந்து தற்போது வரையிலும் தனது அப்பாவின் வருகைக்காக லக்ஷ்மி காத்துக் கொண்டிருக்கிறாள்.

இந்த தகவலை அறிந்த பாரதி இங்கு இருந்தால் எப்படியாவது கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவிற்கு அழைத்து சென்று விடுவார்கள் எனற எண்ணத்தில் ஹைதராபாத் கிளம்பினான். தன்னுடன் ஹேமாவையும்  அழைத்து செல்வதற்காக இரண்டு டிக்கெட்டுகளை புக் செய்திருந்தான் பாரதி.

ஆனால் ஹேமா வரமுடியாது எனக் கூறி விட்டாள்.  பிறகு கண்ணம்மா பாரதியை நேரில் சந்தித்து எனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டால் ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம் எனக் கூறுகிறார். அதற்கு பாரதி அந்த ரகசியத்தை இப்போதே சொல் என கேட்கிறான் உடனே கண்ணம்மா ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கும்  டாக்டரே எனக் கூறுகிறாள்.

பாரதியைத் தொடர்ந்து வெண்பாவையும் கண்ணம்மா எனது பிறந்தநாள் விழா இன்று மாலை எனது வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார். வெண்பாவும் அந்த ரகசியத்தை மிகவும் ஆர்வமாக அதனைப் பற்றி  தெரிந்து கொள்வதற்காக செல்கிறார். பிறகு இலட்சுமி ஆர்வமாக காத்திருக்கும் நிலையில்  உன்னுடைய அப்பா டாக்டர் பாரதி என கண்ணம்மா வெளிப்படுத்த போகிறாள்.  அதோடு ஹேமாவும் நான் பெற்றெடுத்த குழந்தையை தான் என்ற ரகசியத்தை பாரதியிடம் உடைத்து விடுகிறாள்.  அதன் பிறகுதான் அனைவருக்கும் தெரிய வர போகிறது ஹேமா மற்றும் லட்சும் இருவரும் இரட்டை குழந்தைகள் என்று.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment