ஷர்மிளாவை தவறாக எடைபோட்ட சௌந்தர்யா.! இன்றைய எபிசோட்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து  சீரியர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் சமீப காலங்களாக சீரியல்களிலும் ஏராளமான டுவிஸ்ட்கள் இருந்த வண்ணம் இருக்கிறது. எதிர்பாராமல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து சில புதிய கேரக்டர்களும்  அறிமுகமாகியுள்ளார்.

பாரதிகண்ணம்மா சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது பிறகு பெரிதாக சுவாரசியம் இல்லாத காரணத்தினால் இந்த சீரியலை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் டிஆர்பி-யில் முன்னணி வைக்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் விரும்பும் வகையில் எதிர்பாராத சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

பாரதி மற்றும் கண்ணம்மா  சுமார் ஒன்பது வருடங்களாக பிரிந்து இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இவர் வெண்பாவை மிரட்டும் அளவிற்கு இருந்து வருவதால் தற்போது வெண்பா பாரதியைப் பற்றி பேசக்கூட பயந்து வருகிறார்.

எப்படியாவது ஷர்மிளா வெண்பாவிற்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான மாப்பிள்ளைகளை பார்த்து வரும் நிலையில் தற்பொழுது சௌந்தர்யாவை சந்தித்துள்ளார்.

சௌந்தர்யாவின் வீட்டிற்கு சென்று சௌந்தர்யாவை பார்க்கிறாள் ஷர்மிளா சௌந்தர்யாவிடம் எனது மகளின் திருமணத்தை பற்றி தான் பேச வந்துள்ளேன் என்று கூற உடனே சௌந்தர்யாவும் உங்கள் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டுமெனறால் வேறு கல்யாணமாகாத பையனை போய் தேடுங்கள் எங்க வீட்டில் தான் மாப்பிள்ளை இல்லையே எனக்கு மூன்று பிள்ளைகள் தான் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று கூறும் நிலையில் உடனே ஷர்மிளா நான் உங்கள் வீட்டில் மாப்பிள்ளை கேட்டு வரவில்லை நீங்கள் எனக்கு மிகவும் தெரிந்தவர் என்பதால் உங்களுக்கு தெரிந்த நல்ல மாப்பிள்ளை யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று கூற நான் வந்தேன் கூறுகிறார் இந்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment