விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள். டிஆர்பியில் டாப் சீரியலாக இடம்பெற்றுள்ளன. மேலும் இதை தொடர்ந்து விஜய் டெலிவிஷனில் பாரதிகண்ணம்மா சீரியல் பல விருதுகளை தட்டிச் சென்றது. இதனை தொடர்ந்து இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து லட்சுமி கண்ணம்மாவிடம் வழக்காடி கொண்டு வருகிறார். அதன் பிறகு ஒரே வேர்வையாக இருக்கு என்று கூறி அதன்பிறகு இதே நம்ம பாட்டி வீட்டில் இருந்தால் ஏசியா இருந்திருக்கும் என்று கூறுகிறார். அதன்பிறகு கண்ணம்மா விடம் போனை கொடுங்கள் என்று போனை வாங்கியதும் டாக்டர் பாரதிக்கு போன் போடுகிறார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது கண்ணம்மா பதட்சத்திலே இருந்த நிலையில் ஆனால் லட்சுமி எதுவும் காட்டிக்க மாட்டேன் என்று லட்சுமி கண்ணம்மாவிடம் கூறுகிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் வெண்பா நல்லா உறங்கிக் கொண்டு இருக்கிறார் அப்போது வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா வெண்பாவை எழுப்பி உன்னை பொண்ணு பாக்க வரப் போவதாக கூறுகிறார். இதைக்கேட்ட வெண்பா கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு சர்மிளா ஒரு தடவ சொன்னா சொன்னதுதான் என்று புடவை நகையெல்லாம் கொடுத்து அலங்கரித்து வரச் சொல்கிறார்.
அதன்பிறகு பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு ஹேமா வெற்றி பெறுகிறார். அதை லட்சுமிடம் கூறியபோது அந்த நேரத்தில் சௌந்தர்யா வருகிறார். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதை லட்சுமி சௌந்தர்யாவிடம் கூறிவிட அதற்கு சௌந்தர்யா லட்சுமியை வாழ்த்தி முத்தம் கொடுக்கிறார். அதற்கு ஹேமா பரிசு கொடுத்தது எனக்கு முத்தம் கொடுப்பது லட்சுமிக்கா என்று கோபமாக செல்கிறார். அப்போது ஹேமாவை சமாதானப்படுத்தி வருகிறார் சௌந்தர்யா.
இந்நிலையில் வெண்பாவை எல்லோரும் பொண்ணு பார்க்க வந்திருந்த போது வெண்பா அடக்க ஒடுக்கமாக வந்து எல்லாரிடமும் நடித்து மாப்பிள்ளையிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது வெண்பாவிற்கு வேறு வேறு நம்பரில் கால் வந்து ஆண்கள் பெயரை சொல்லி பேசுகிறார். முத்தம் கொடுப்பதாகும் சில விஷயங்களை செய்து வருகிறார். இதைப் பார்த்த மாப்பிள்ளை முகம் சுளித்து விடுகிறார். ஆனால் வெண்பாவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. இதைத்தொடர்ந்து என்ன நடக்க இருப்பதை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.