கேஜிஎப் பட ரேஞ்சுக்கு கதையை உருட்டும் பாரதி கண்ணம்மா சீரியல்.! அட்டூழியம் தாங்க முடியாமல் கடும் கோபத்தில் ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் சம்பந்தமே இல்லாத பல காட்சிகளை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்திற்கு உள்ளாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் தொடர்ந்து பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைவது போல பல காட்சிகள் வந்தாலும் ஆனால் அவர்கள் இணையவில்லை. இவ்வாறு இதனை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதால் ரசிகர்கள் இந்த சீரியலை இழுத்து மூடுங்கள் என்று கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது ஜானகி மற்றும் ராமன் என இரண்டு வயதான ஜோடிகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். ஜானகி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை மிகவும் மகிழ்ச்சியாகவும்,பத்திரமாகவும் பாரதி, கண்ணம்மா, ஹேமா, லட்சுமி என அனைவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் லாஜிக்கே இல்லாமல் மருத்துவமனையில் ஜானகியின் உறவினர்கள் வருகிறார்கள் அதற்கான பங்க்ஷனும் நடைபெறுகிறது. மேலும் ஜானகி மருத்துவமனையில் இருப்பவர்களை அழைத்துச் சென்றே தனது பணியாற்றிய பள்ளிக்கூடத்தை காட்டுகிறார்.

அங்கு போவதற்காக லட்சுமி மற்றும் ஹேமாவும் வருகிறார்கள். ஹேமாவுக்கு சமையல் அம்மா தான் தன்னுடைய அம்மாவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் கண்ணம்மாவை உத்து உத்து பார்க்கிறார். பிறகு கண்ணம்மாவை ஹேமா தூக்க சொல்கிறார் ஓகே உடன் முத்தம் கொடுக்கிறார். கண்ணம்மாவும் ஹேமாவிற்கு முத்தம் தருகிறார். மேலும் கண்ணம்மா இவர்களுக்கிடையான பாச போராட்டம் தான் இன்று வெளியாக இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment