பாரதி கண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண்.! வைரலாகும் ஃபுரோமோ..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.  அந்த வகையில் அறிமுகமான சில காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது.ஆனால் தற்போது 6, 7வது இடம் போன்றவற்றை பிடித்து வருகிறது.  அதோடு கண்ணம்மாவின் பிறந்தநாளன்று லட்சுமியிடம் தனது அப்பா யார் என்று கண்ணம்மா சொல்லுவார் என்று ரசிகர்களிடம் பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசியில் ரசிகர்களுக்கு பெரும் டுவிஸ்ட் வைக்கப்பட்டது. இவ்வாறு ஒரு கதையை வைத்து தொடர்ந்து சவ்வு போல் இழுத்துக் கொண்டே போவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இந்த சீரியல் கிட்டத்தட்ட 700 சீரியல்களை கடந்து மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்த கதை ரசிகர்கள் மத்தியில் மிகவும் போரடித்து போனதால் மீண்டும் டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக இந்த சீரியலின் தயாரிப்பாளர் அதிரடியான முடிவை எடுத்துள்ளாராம். அதாவது கண்ணம்மா மற்றும் பாரதியின் பிரிவிற்கு காரணமான வருண் என்ரி கொடுக்கப் போகிறாராம்.

இந்நிலையில் வெண்பாவும் எப்படியாவது ஹேமாவிடம் நல்ல பெயரை வாங்கி பிறகு பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஹேமாவின் ஸ்கூலிற்க்கே சென்று பிரியாணி எடுத்துக் கொண்டு போய் இருந்தார்.

இவ்வாறு பல திட்டங்களை செய்து வருகிறார் வெண்பா. எனவே விரைவில் இந்த சீரியலின்  கதை மாறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதோடு வருண் நடித்துவரும் காட்சிகள் எப்பொழுது வெளியாகும் என்று சரியாக தெரியவில்லை ஆனால் அந்தக் காட்சிகளுக்காக ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment