அனைவர் முன்பும் சட்டையைப் பிடித்து மீனாவின் அப்பாவை கேள்வி கேட்கும் ஜீவா.! இன்றைய எபிசோட்..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில்  தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.  அப்படி அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவையும் தனது கணவனின் தம்பிகளை தனது மகன்களாக பார்த்து வளர்த்து அவர்களுக்காக கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்து வந்தவர் தான் தனம்.

தற்பொழுது தான் தனத்திற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து மீனா வசதியான குடும்பத்தில் இருந்து வந்ததால் ஜீவா வீட்டிற்கும் வந்து வசதியாக இருக்கவேண்டும் என எண்ணுகிறாள் இதனால் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் செயற்கை முறையில் குழந்தை பாக்கியத்தை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று எண்ணி மூர்த்தி தனக்கு தெரிந்தவர்களிடம் ரூபாய் 5 லட்சம் கடனாக வாங்கி நான்.

இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் மீனா, தனம், முல்லை இவர்களின் பெற்றோர்கள் ஒன்று சேர திடீரென்று வீட்டிற்கு முன்பு வந்து கடன்காரர்கள் பணத்தை மீண்டும் தருமாறு சண்டை போடுகின்றனர் இதனை பார்த்த மீனாவின் அப்பா மிகவும் கோபப்படுகிறார்.

பிறகு தனம் தனது கையில் போட்டிருந்த வளையலை கழட்டி கொடுத்து இதனை வித்துட்டு வந்து இந்த கடனை அடையுங்கள் என்று கூறுகிறார்.  மீனாவின் அம்மா அந்த வளையலை பிடிங்கி இருக்கிற எல்லாத்தையும் வித்துட்ட இந்த வளையலாவது வைத்து இரு என்று கூற மீனாவின் அப்பா எல்லாம் நாடகம் என்று கூற ஜீவா உடனே சட்டையைப் பிடித்து என்ன சொல்றீங்க என்று மிரட்டுகிறான்.

Leave a Comment