ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் கோபி.? பாக்கியலட்சுமி சீரியலில் வெடித்தது பிரச்சனை

0
bhakiya-lakshmi
bhakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் திருமணம் ஆனதுபோல் பல புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் முன்னணி சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் முழுவதும் ஒரு குடும்பத் தலைவி  கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் குடும்பத் தலைவியாக பாக்கியலட்சுமி தனது குடும்பத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டுவார் அதோடு கணவர் அவருடைய பிள்ளைகள் யாரும் மதிக்க மாட்டார்கள்.

சின்ன மகனாக நடித்து வரும் எழில் மட்டும் தான் பாசமாக இருப்பான். பல அவமானங்களை சந்தித்து வரும் பாக்கியா பிறகு தற்போதுதான் தனக்கென ஒரு பிசினஸை ஆரம்பித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் கோபி தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இருப்பான் ஆனால் அது முடியாமல் போனதால் தற்பொழுது தனது குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகாவை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் கொஞ்சம் நாட்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி இருப்பார். ஆனால் ராதிகாவின் அம்மா இப்பொழுதே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அவரை கட்டாயப்படுத்தி வருவார். இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கு எப்பொழுது திருமணம் ஆகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வந்தார்கள்.]

bhakiya lakshmi serial
bhakiya lakshmi serial

அந்த வகையில் அடுத்த எபிசோடில் இவர்களுக்கு திருமணமாக உள்ள காட்சி ஒளிபரப்பாக உள்ளது. அந்த வகையில் ராதிகா மற்றும் கோபி இருவருக்கும் திருமணம் ஆனது போல் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.