பொம்பள சோக்கு கோபி , கூமுட்ட பாக்கிய என பாக்கியலட்சுமி சீரியலை வச்சு செய்யும் ரசிகர்கள்.! இயக்குனரையும் விடவில்லை.

0
bhakiya lakshmi 1
bhakiya lakshmi 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் கோபி பாக்கியலட்சுமியிடம் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இவ்வாறு தனது அப்பா,அம்மா, மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவி என்று யாரையும் நினைத்துப் பார்க்காமல் கோபி அனைவரையும் விட்டுவிட்டு  ராதிகா மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டான்.

இவ்வாறு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கும்போது கூட பாக்யா எதற்கு என்று கூறாமல் கண்மூடித்தனமாக கோபியை நம்பி கையெழுத்து போட்டு விடுகிறாள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் கோபியின் மீது இருக்கும் நம்பிக்கை தான்.

பிறகு பாக்கியாவிடம் கோபி தன்னுடைய கம்பெனியில் நிர்வாக ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் ஆவணங்களை உன்னுடைய பெயரை மாற்றப் போகிறேன் அது தான் இது என்று மணசாட்சி இல்லாமல் பொய் சொல்கிறான்.  இதனை நம்பிய முட்டாள் பாக்கியா கோபி தன் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறார் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறார்.

பிறகு ராதிகாவை பார்ப்பதற்காக நேரில் செல்கிறான்.  இருவரும் வக்கீலை பார்த்து எனது மனைவியின் முழு சம்மதத்துடன் தான் நான் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கினேன் என்று பொய் சொல்கிறான்.  இவ்வாறு எவ்வளவு பொய் சொன்னாலும் பரவாயில்லை ராதிகாவுடன் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறான்.

ராதிகாவும் கோபி பாக்கியத்தை விவாகரத்து செய்து விட்டதால் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டாள். இன்னும் ஆறு மாதத்தில் பாக்கி அவை நிரந்தரமாக விட்டு பிரிந்து விட்டு ராதிகா உடனே வாழ ஆரம்பித்து விடுவான் கோபி.

இவ்வாறு இந்த சீரியலை பார்த்து வரும் ரசிகர்கள் கூமுட்டை பாக்கியா,  பொம்பள சோக்கு கோபி என இந்த சீரியல் மற்றும் இயக்குனர் ஆகியோர்களை வைத்து நெட்டிசன்கள் கண்டபடி கிண்டல் செய்து வருகின்றனர்.