ரம்யா கிருஷ்ணனை வெறுப்பேற்றிய வனிதா விஜயகுமார்!! வைரலாகும் வீடியோ…

0

சமீப காலங்களாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதுவும் முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் அதிக எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டுகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ், கலக்கப்போவது யாரு, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது பிக்பாசில் கடந்த நான்கு வருடங்களாக கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களையும் வைத்து BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த போட்டியில் ஒருவராக பிக்பாஸ் சீசன் 3 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த வனிதாவும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு முன்பே பல நிகழ்ச்சிகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் பெயரை வாங்கி வந்த இவருக்கு இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் எடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அதோடு முக்கியமாக வனிதா யாரையும் பார்த்து பயப்படாமல் மனதில் தோன்றியதை நேருக்கு நேராக சொல்வது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த ப்ரோமோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

காட் வித் டெவில் என்ற ரவுண்டில் வனிதா காளி வேடத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடனம் ஆடிவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ரம்யா கிருஷ்ணன் வனிதா விஜயகுமாருடன் நடனமாடியவர்களை ஒப்பிட்டு பேசியதால் வனிதா விஜயகுமார் தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்புகிறார் அதற்கு ரம்யா கிருஷ்ணன் வேகமாக கத்துகிறார் இந்த ப்ரோமோ தான் வைரலாகி வருகிறது.