ராதிகா இனியா இடையே வெடித்த சண்டை… இடையில் புகுந்து பஞ்சாயத்து செய்த கோபி..! வைரலாகும் இன்றைய எபிசோட்

baakiya-laklshmi
baakiya-laklshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியிடம் இனியா ராதிகா தன்னை அடிக்க வந்ததை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் உடனே ராமமூர்த்தி நீ ராதிகாவிடம் இப்படி எல்லாம் நடந்து கொள்வது சரி இல்லை என சொல்கிறார் பிறகு இனியா என்னை அடிக்க இவங்க யார் என கேட்க நீ அவங்க வீட்லதான் இருக்கிற என ராமமூர்த்தி சொல்கிறார்.

உடனே ராமமூர்த்தி உனக்கு இதையெல்லாம் தேவைதானா என கேட்க எனக்கு இங்க இருக்கவே பிடிக்கவில்லை என இனியா சொல்கிறார் அப்பொழுது வா நம்ம வீட்டுக்கு போகலாம் என ராமமூர்த்தி சொல்ல டாடியை அழைத்துச் செல்வோம் என கூறுகிறார் அந்த நேரம் கோபி வர ராதிகாவை அழைக்கிறார். ஆனால் ராதிகா வீட்டில் இல்லை என இனியா சொல்கிறார் பிறகு கோபிக்கு காபி கொண்டு வந்து கொடுக்க கோபி சந்தோஷப்படுகிறார்.

கோபியிடம் வாங்க நம் வீட்டிற்கு போகலாமா என கேட்க கோபி அதிர்ச்சடைகிறார் இதுதான் நம்ம வீடு என கோபி சொல்ல இது இல்லை டாடி எழில், செழியன், பாட்டியென அனைவரும் அங்க இருக்கிறாங்க எனவே எனக்கு இங்க இருக்க பிடிக்கவில்லை என கூறுகிறார். அப்பொழுது ராதிகா ஏதாவது சொன்னாளா எனக் கேட்க என்னை அவங்க அடிக்க வந்ததாக கூறுகிறார்.

அப்பொழுது கோபி நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல மறுப்பக்கம் கோபி ராதிகாவை தனியாக அழைத்து சென்று என்னாச்சு என கேட்கிற அதுக்குள்ள உங்களிடம் அவள் சொல்லிவிட்டாளா என கேட்கிறார். அப்பொழுது கோபி இனியாவிடம் ஏன் அப்படி நடந்து கொள்கிறாய் என கேட்க அவளுக்கு என்னை கண்டாலே பிடிக்கவில்லை என சொல்கிறார். மேலும் கோபி முதலில் மயூராவும் என்னை பிடிக்காமல் இருந்தால் ஆனால் நான் நடந்து கொண்டதை வைத்து தான் பாசமாக பழகினால் அது போல தான் நீயும் நடந்து கொள்ள வேண்டும் என கூற அதற்கு ராதிகா இனி மேல் அவள் என்ன செய்தாலும் நான் கேட்க மாட்டேன் என சொல்கிறார்.

பிறகு இனியாவிடம் பேச இனியா எதுவும் பதில் சொல்லவில்லை எனவே ராதிகா என் மீது தான் தவறு என்னை மன்னித்துவிடு என சொல்ல ஆனால் இனியா எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்புகிறார் ராமமூர்த்தி அதனை பார்த்து வருத்தப்பட பிறகு இனியா வர பாத்திங்களா நான் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டேன் என கூறுகிறார் எனவே ராமமூர்த்தி நீ செய்வது தவறு உன் அம்மா இப்படி உன்னை வளர்க்கவில்லை என சொல்கிறார். இவ்வாறு இனியா நடந்து கொள்வதை பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள்.