குடித்துவிட்டு கிடந்த கோபியை தேடிச்சென்று அழைத்து வந்த ஈஸ்வரி.! இப்படியே விடக்கூடாது என டார்ச்சர் செய்யும் ராதிகா..

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஏராளமான திருப்பங்கள் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது ராதிகா கோபி இருவரும் பாக்கியாவின் வீட்டில் தங்கி வரும் நிலையில் இவர்களை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என அனைவரும் நினைத்து வருகின்றனர்.

ஆனால் ராதிகா இந்த வீட்டை விட்டு போக முடியாது என்ற முடிவில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு ராதிகா ஆபீஸிற்கு சென்றவுடன் பாக்யாவை வேலை செய்ய விடாமல் தனக்காக காக்க வைக்கிறார். எனவே இதனால் கோபமடைந்த பாக்யா கேண்டின் ஓனர் கோடீஸ்வரனிடம் ராதிகாவை பற்றி கம்பளைண்ட் செய்ய அவரும் ராதிகாவை அழைத்து அவர்களுக்கு வேலை இருக்கும் எனவே காக்க வைக்க கூடாது பர்சனல் விஷயங்களை வேலையில் காட்டாதீர்கள் என கண்டிக்கிறார்.

மேலும் இங்கு நடந்ததை பற்றி ஈஸ்வரி ராமமூர்த்தி என தனது குடும்பத்தினர்களிடம் பாக்யா கூற ராதிகா வந்தவுடன் ஈஸ்வரி சண்டை போடுகிறார் இவ்வாறு இந்த சண்டை முத்திப்போக இந்த நேரத்தில் சரியாக கோபி வருகிறார். எனவே நடந்ததை ஈஸ்வரி கோபியிடம் சொல்ல உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை உன்னால இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நிம்மதியாக இல்ல அமைதியா இருந்தா இரு இல்லையென்றால் இப்பவே வீட்டை விட்டு கிளம்பு என கூறியவுடன் ராதிகா தனது அம்மாவை தேடி சென்று விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கோபி குடித்துவிட்டு கிடக்க அவரை தேடி ஈஸ்வரி செழியன் இருவரும் செல்கின்றார்கள். பிறகு கோபியின் காரை வைத்து கண்டுபிடிக்க அவரை காரில் அமர வைத்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர் இந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா சும்மா விடக்கூடாது என ராதிகாவை கோபிக்கு போன் பண்ண சொல்ல ஆனால் கோபி  எடுக்கவில்லை இதோட அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.