வீட்டிற்கான 18 லட்சத்தை கொடுக்க பழனிச்சாமியை நாடிய பாக்யா.! பாக்கியலட்சுமி இந்த வார ப்ரொமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா இருவரும் பாக்யாவின் வீட்டில் தங்கி வரும் நிலையில் தொடர்ந்து இதனால் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவை ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்ட நிலையில் ராதிகாவின் அம்மா போலிசை வீட்டிற்கு அழைத்து வர அவர்கள் ராதிகாவிற்கு தான் அனைத்து உண்மையும் இருக்கிறது எனக் கூறிவிட்டு சென்று விடுகிறார்கள்.

அதன் பிறகு எந்த சண்டையும் பெரிதாக இல்லாமல் இருந்து வந்தது இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவை பார்ப்பதற்காக அவருடைய அம்மா மற்றும் அண்ணன், அண்ணி ஆகியோர்கள் வீட்டிற்கு வர அவர்களுக்கு சமைக்க வேண்டும் என காதிகா பாக்யாவை கிச்சனை விட்டு வெளியில் போக சொல்கிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி முதல்ல நீ வந்த அப்புறம் உன் பொண்ணு வந்தா இப்ப குடும்பமே இங்க வந்துடுச்சு என கூறி சண்டை போட கடுப்பான ராதிகா ஏய் என கையை நீட்டி மரியாதை இல்லாமல் பேசி விடுகிறார்.

இதனால் பாக்கியாவும் சண்டை போட கோபி வந்தவுடன் நடந்த அனைத்தையும் ராதிகா சொல்கிறார் அப்பொழுது பாக்யா ஈஸ்வரிக்கு சாதகமாக பேச கோபி ராதிகாவிடம் கேள்வி கேட்க நீ யார் என சண்டை போடுகிறார். பிறகு உங்களுக்கு இன்னும் 18 லட்சம் தர வேண்டியது இருக்கு அது கொடுத்து விட்டால் கிளம்பிடுவீங்களா என கேட்க கோபியும் பணத்தை முதலில் கொடு அதுக்கப்புறம் பாத்துக்கலாம் என திமிராக பதில் சொல்கிறார்.

எனவே எப்படியாவது இந்த பணத்தை கோபியிடம் கொடுத்து விட வேண்டும் என பாக்யா நினைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்ற பாக்யா பழனிச்சாமியிடம் சார் நீங்க ஒரு சமையல் ஆர்டர் சொன்னீங்களே அதனை எடுத்து நடத்தலானு இருக்கேன் சார் என கூற நெஜமாவா என பழனிசாமி கேட்கிறார்.

பிறகு வீட்டிற்கு வந்த பாக்கியா ஈஸ்வரி, ராமமூர்த்தியிடம் மூன்று நாள் 5 ஆயிரம் பேருக்கு சமைக்கணும் அத்தை என சொல்ல அதற்கு ஈஸ்வரி ஐயாயிரம் பேரா என அதிர்ச்சி அடைகிறார். அதற்கு பாக்யா ஆமாம் என சொல்ல ராமமூர்த்தி நீ சமைச்சிடுவியா என கேட்கிறார். எனவே பாக்கியா முதலில் நானும் முடியாதுன்னு தான் நினைச்சேன் என சொல்ல ஈஸ்வரி எங்களுக்காக ஒத்துக்கிட்டியா என கேட்கிறார். ராமமூர்த்தியும் எங்களுக்காக உன்ன வருத்திகிட்டு எதுவும் செய்யாதமா என்ன சொல்ல அதற்கு பாக்கியா அதெல்லாம் பண்ணிடலாமா நம்ம வீட்ட மறுபடியும் நம்ம வாங்கி தான் ஆகணும் மாமா என சிரித்த முகத்துடன் கூற இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.