வீட்டிற்கே சென்று பழனிச்சாமியை திட்டுகிறேன் என்று வாங்கி கட்டிக் கொண்ட கோபி.! பவுன்சரை பார்த்து பயந்தது தான் மிச்சம்… பாக்கியலட்சுமி ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை விவாகரத்துக் கொண்டு ராதிகாவை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இருவரும் பாக்கியாவின் வீட்டில் தங்கி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பழனிசாமிக்கு வயசான காரணத்தினால் எப்படியாவது இவருக்கு ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என பாக்கியா குடும்பத்தினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அப்படி ராமமூர்த்தியின் சொந்தக்கார குடும்பம் பழனிசாமியை மாப்பிள்ளை பார்ப்பதற்காக பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார்கள்.

இதற்கான டெக்ரேசன் வேலைகளும் முடிந்த நிலையில் இதையெல்லாம் பார்த்த கோபி பழனிசாமிக்கும் பாக்கியாவுக்கும் தான் திருமணம் என நினைத்துக் கொள்கிறார். எனவே எப்படியாவது இவர்களுடைய திருமண தடுத்து நிறுத்த வேண்டும் என முயற்சிக்கிறார்.

மறுபுறம் ராதிகா, பழனிசாமி பாக்யா உடைய திருமணத்திற்கு மயூவையும் அழைத்துக் கொண்டு மூன்று பேரும் செல்ல வேண்டும் எனக் கூற கோபிி அதிர்ச்சி அடைகிறார். வர வர சுத்தமாக கோபிக்கு ராதிகாவை பிடிக்கவில்லை. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி பழனிசாமியின் வீட்டிற்கு செல்கிறார்.

காரில் இருந்து இறங்கியவுடன் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பழனிச்சாமி வரண்டா இன்னைக்கு இருக்கு உனக்கு என வீரத்துடன் கெத்தாக நடந்து செல்ல வீட்டிற்குள் நுழையும் நேரத்தில் பவுன்சர் கோபியின் நெஞ்சில் கையை வைத்து உனக்கு என்ன வேணும் என கேட்க பதட்டமடைகிறார் பிறகு பழனிச்சாமியை பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

மிஸ்டர் பழனிசாமி நீங்க எதற்கு என்னோட வைஃப்ப அடிக்கடி மீட் பண்ணி பேசுறீங்க உங்க வைஃப்புங்களா, சார் உங்க வைஃப் நான் பார்த்ததே இல்லையே எனக் கூற அதற்கு ஏய் லிசன் மேன் சூப்பர் மார்க்கெட்ல சிரிச்சு பேசறது, டியூஷன் கிளாஸ்ல லூட்டி அடிக்கிறது இதையெல்லாம் இதோட நிறுத்திக்கோ புரியுதா இல்லையா என கூற அதற்கு பழனிசாமி இது எங்களுக்குள்ள இருக்கிற பர்சனலுங்க அதனால நீங்க உங்க வேலைய பாருங்க என இங்கிலீஷில் சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.