விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது கோபி பாக்கியா பழனிசாமியை திருமணம் செய்வதாக நினைத்துக்கொண்டு படாத பாடு பட்டு வருகிறார். அதாவது ஈஸ்வரி ராதிகாவை வீட்டை விட்டு வெளியே துரத்திய நிலையில் நடுரோட்டில் அழுது கொண்டிருந்த ராதிகா தனது அம்மாவிடம் நடந்த விஷயங்களை கூறுகிறார்.
அவரும் போலீசை வீட்டில் அழைத்து வர போலீஸ் பாக்யாவை சட்டப்படி விவாகரத்து வந்து விட்டார்கள் எனவே ராதிகாவிற்கு தான் அனைத்து உரிமைகளும் என சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். எனவே ராதிகா ஓவராக ஆட்டம் போட்டு வரும் நிலையில் தற்போது பாக்கியா பழனிசாமியிடம் தனது மாமாவின் சொந்தக்கார பெண் நாளைக்கு வீட்டிற்கு வராங்க நீங்க பொண்ணு பார்ப்பதற்காக வரவேண்டும் என கூறி பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனை ஒட்டுக் கேட்ட கோபி பாக்யாவைதான் பழனிசாமி பொண்ணு பார்க்க வருவதாக புரிந்து கொள்கிறார் மேலும் பாக்கியா எந்த வயதில் திருமணம் செய்து கொண்டால் என்ன பேசுவதை கேட்டு இதையெல்லாம் யாரும் கேட்கவில்லை என வருத்தப்படுகிறார்.
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பாக்யா புது மணப்பெண் போல் அலங்கரித்து காபி போட்டு பழனிசாமிக்கு தருகிறார். பழனிசாமி பாக்கியாவை ரொமான்டிக்காக பார்த்துக்கொண்டு டீ நல்லா இருப்பதாக கூறுகிறார்.
நீங்களும் தான் என் சொல்ல இவ்வாறு கனவு கண்ட கோபி திடீரென எழுந்து உட்கார்ந்து இருக்கிறார் பிறகு ராதிகாவும் என்ன ஆச்சு என கேட்க ஹலோ உங்களது என்ன பிரச்சனை என கேட்க அதுக்கு கோபி பாக்கியாவிற்கு கல்யாணம் என சொல்ல அதற்கு ராதிகா பாக்யா கல்யாணம் பண்றாங்கன்னு வச்சுக்கோங்க அதற்கு நீங்க ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க? எனக் கேட்க என்ன செய்வதென்று தெரியாமல் கோபி முழிக்கிறார் இதோ அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.