சரியான நேரத்தில் கோபியை பழிவாங்கிய ராதிகா.! வலி தாங்க முடியாமல் கதறும் நிலை.. ஓவராக படம் காட்டும் இனியா

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர்ந்து சக்காளத்தி சண்டை  நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது மையூவும் பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

எனவே இதனால் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் பாக்யா ஒரு கட்டத்தில் மயூவை ஏற்றுக்கொண்டு ராதிகாவிற்கு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். மையூவும் நான் உங்களுடன் பேசுவதை பார்த்தால் அம்மா திட்டுவாங்க என கூறி இருக்கும் நிலையில் இருவரும் ராதிகாவிற்கு தெரியாமல் பேசி வருகின்றனர்.

மயூவிற்கு மேக்ஸ் டவுட் இருந்ததனால் ராதிகா கோபியை சொல்லித் தருமாறு கூறுகிறார் எனவே இந்த நேரத்தில் இனியா வர பிறகு கோபி மயூவிற்கு சொல்லித் தருவதை பார்த்துவிட்டு சென்று விடுகிறார் இதனைப் பார்த்த ஈஸ்வரி எதற்கு படிக்காமல் இங்கு வந்த என கேட்க அப்பா மயூவிற்கு சொல்லித் தருவதை கூறுகிறார்.

உனக்கு சொல்லித் தரது தான் முக்கியம் என இனியாவை அழைத்துச் சென்று கோபியிடம் இனியாவுக்கு சொல்லித்தா அவ தான் பிளஸ் டூ போறா அது தான் நமக்கு முக்கியம் என சொல்ல கோபி இருவருக்கும் சொல்லி தருவதாக கூறுகிறார். ஆனால் அது முடியாது என ஈஸ்வரி சொல்ல பிறகு ராதிகா மயூவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

எனவே இனியாவிற்கு கோபி சொல்லித் தர இது என்ன புது பிரச்சனையாக இருக்கு என பயப்படுகிறார். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனியா ரொம்ப நேரமாக படித்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த நேரத்தில் மயூவுக்கு தூக்கம் வர சரியாக தூங்க முடியவில்லை.

அதற்காக ராதிகா லைட் ஆஃப் பண்ணாம எப்படி தூங்குவா என கேட்க இனியா படிக்கிறது முக்கியம் தானே என பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் இனியா அப்பா எனக்கு சொல்லித்தாங்க ஏன் தேவையில்லாம பேசுறீங்க என கூறுகிறார். எனவே கோபி ராதிகாவிடம் தூங்க சொல்கிறார் ராதிகாவும் படுத்தவுடன் கோபத்தில் கோபியின் கால் மேல் வேகமாக கையை வேண்டும் என்றே போட கோபி வலி தாங்காமல் காத்துகிறார் பிறகு ஏன் இப்ப என்ன அடிச்ச என கோபி கேட்க அதற்கு ராதிகா இல்ல கோபி தெரியாமல் கைப்பற்றி எனக் கூறுகிறார் இவ்வாறு ராதிகா சரியான நேரத்தில் கோபியை பழி வாங்கியுள்ளார்.

Leave a Comment