மிகவும் கோலாகலமாக நடைபெற்ற கோபி-ராதிகாவின் ரிசெப்ஷன்.! பாக்யாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி..

baakiyalakshmi-1
baakiyalakshmi-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கோபி இவர்களுடைய ரிசெப்ஷன் மிகவும் கோலாகலமாக நடக்கிறது. சமையலறையில் பாக்யா அவரது குழுவுடன் மிகவும் பிசியாக சமைத்து வருகிறார். பிறகு கோபி ராதிகா இருவரும் ரிசப்ஷனில் மிகவும் அழகாக அமர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பிறகு எல்லோரும் கீழே வந்து இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் ஜூஸ் குடிக்கின்றனர்.

அதில் ராதிகாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாக்யாவை பார்ப்பார்கள் என்ற விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பாக்யாவிற்கு ராதிகா கோபியின் திருமணம் தான் இங்கு நடக்கப்போகிறது என்பது தெரியவந்துள்ளது. ஆனால் தற்பொழுது வரையிலும் இதனைப் பற்றி கோபி ராதிகாவிற்கு தெரியாமல் இருந்து வரும் நிலையில் அவர்கள் எப்படி சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடுகள் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

தற்பொழுது வரையிலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அவரவர்களுடைய வேலையில் மிகவும் பிசியாக இருந்து வருகிறது பிறகு ரிசப்ஷன் தொடங்குகிறது கோபி மற்றும் ராதிகா இருவரும் மணமேடைக்கு வர அனைவரும் கிப்ட் கொடுத்து வாழ்த்துக்களை கூறுகிறார்கள். இந்நிலையில் மறுபுறம் கோபியின் அப்பா ராமமூர்த்தி ஆட்டோவில் மண்டபத்தை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார்.

மறுபக்கம் மையூர் தொண்டை வலிக்குது ஹாட் வாட்டர் வேண்டுமென தன்னுடைய பாட்டியிடம் கேட்க மேலே கிச்சனுக்கு போய் வாங்கிக்க என்ன சொல்ல மேலே போகும் மையூ யாராவது இருக்கீங்களா என சொல்ல குரல் கொடுக்கிறார். பிறகு பாக்யாவை பார்த்தவுடன் மையும் ஆன்ட்டி நீங்களா எனக் கூற இருவருமே அதிர்ச்சி அடைகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சில நேரங்களில் ராதிகாவும் பாக்யாவை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைகிறார் இவ்வாறு இவர்கள் அதிர்ச்சியடைய எப்படியோ இவர்களுக்கு மிகவும் வெற்றிகரமாக திருமணம் நடந்து முடிகிறது. பலர் முயற்சி செய்தும் கோபி ராதிகாவின் திருமணம் தடைப்படவில்லை மேலும் இவர்களுடைய திருமணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பதை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டிருந்த புகைப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளப்படுகிறது.