விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ், ரேஷ்மா, சுசித்ரா ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோபி பாக்யாவிற்கு விவாகரத்து ஆன நிலையில் அடுத்தபடியாக ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவில் கோபி இருந்து வந்தார். அந்த நேரத்தில் ராதிகா ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் பிறகு தன்னுடைய அம்மா அண்ணனின் அறிவுரையின்படி தற்போது திருமணத்திற்கு ஒப்பு கொண்டு உள்ளார். இவர்களுடைய திருமணம் சிறப்பாக நடக்க இருக்கும் நிலையில் இந்த வார இறுதியில் இவர்களுடைய திருமணம் முடிவெடுக்கிறது.
மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு பாக்கியா தான் சமைக்க வந்துள்ளார் தன்னுடைய கணவர் கோபிக்கு தான் திருமணம் என்பது என்று தெரியாமலே இருந்து வந்த நிலையில் பிறகு ராதிகாவின் மகள் மூலம் பாக்யாவிற்கு தெரிய வருகிறது புது தம்பதியினர்களான ராதிகா, கோபி இருவரும் மண்டபத்திற்கு வர பிறகு பாக்கியா அதனை பார்த்து விடுகிறார்.
இதனால் அதிர்ச்சடைகிறார் பிறகு நாம் தான் அவருக்கு விவாகரத்து கொடுத்து விட்டோமே இனிமேல் என்ன நடந்தால் என்ன என தன்னுடைய மனதை தேற்றிக்கொண்டு சிறப்பாக சமைத்து தர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் பாக்யா. மேலும் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக கோபியின் அப்பா மண்டபத்திற்கு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து கோபியின் அம்மாவும் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவிலிருந்து வருகிறார். இவ்வாறு மிகவும் எதிர்பார்ப்புகளுடன் கோபி ராதிகாவின் திருமணம் நடக்குமா நடக்காதா என்பதில் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சீரியலின் படப்பிடிப்பிலிருந்து ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா. தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தலை நிறைய மல்லிகை பூ, நெத்தியில் போட்டு என தன்னுடைய மகளுடன் மிகவும் அழகாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை பார்க்கும் பொழுதே தெரிகிறது கோபி, ராதிகாவின் திருமணம் வெற்றி கரமாக நடந்து முடிந்துள்ளது என்று.