அமிர்தாவுக்கு சக்காளத்தியாக என்ட்ரி கொடுக்கும் புதிய கேரக்டர்.! சிக்கலில் மாட்டிக்கொண்ட எழில்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி தற்பொழுது கோபி பாக்யாவிற்கு விவாகரத்து ஆகியுள்ள நிலையில் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் தன்னுடைய மதிப்பை அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் பாக்யா.

எனவே திருமண மண்டபத்தில் இருக்கும் சமையல் ஆடர்களை எடுக்க வேண்டும் என்பதற்காக பெரிய நிறுவனத்துடன் இன்ட்ரியு அட்டென்ட் பண்ணி அதில் தேர்வாகியுள்ளார் மேலும் அதில் முதல் ஆர்டர் வந்துள்ள நிலையில் அது கோபியின் திருமணம் என தெரியாமல் பாக்யா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார் மேலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

மேலும் ஜெனியும் இணைந்து பெண்களின் உதவியுடன் அந்த ஆர்டரை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகும் நிலையில் பத்திரிகை அடித்து, கல்யாண ஷாப்பிங் செய்து வருகிறார். மேலும் அனைத்து வேலைகளும் தடபுடலாக இருந்து வருகிறது எனவே இனியாவிற்கு புது துணி எடுக்க வேண்டும் என கோபி கூர ராதிகாவும் எடுக்கலாம் எனக் கூறுகிறார்.

ஆனால் ராதிகாவின் அம்மா தனியாக அழைத்து ராதிகாவிடம் கொஞ்சம் கூட இதில் விருப்பமில்லை கோபியை விட்டு விடாதே உனது கையை வைத்துக் கொள் எனக் கூறுகிறார் ஏத்தி விடுகிறார். பிறகு எழில் எடுக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கு அந்த கதையை மாற்ற வேண்டும் என எண்ணம் இருக்கிறது எனவே அப்படி செய்தால் கதையை மிகவும் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறார். இதனால் தயாரிப்பாளக்கு இந்த படத்தை தயாரிக்க விருப்பம் இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு வந்து விடுகிறது

எனவே தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி புதிதாக பாக்யலட்சுமி சீரியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். வர்ஷினி ஏற்கனவே எழிலின் தோழி ஆனால் அதனை அவருடைய அப்பா முன்பு வெளிகாட்டாத எழில் தன்னுடைய கதையை மாற்ற விருப்பமில்லை என்று அழுத்தமாக கூறிவிடுகிறார் இப்படிப்பட்ட நிலையில் வர்ஷினி எழிலுக்காக தன்னுடைய அப்பாவிடம் பேசுகிறார் இவ்வாறு எழில் அமிர்தாவை காதலித்து வரும் நிலையில் வர்ஷினியால் இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட இருக்கிறது.