தன்னுடைய கணவரின் இரண்டாவது திருமணம் என தெரியாமல் சமையல் ஆடரை எடுத்த பாக்யா.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

baakiyalakshmi-1
baakiyalakshmi-1

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ள நிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் தடபுடலாக கோபி செய்து வருகிறார். மறுபுறம் பாக்கியலட்சுமி மினி ஹால் ஆர்டரை தருவதாக மண்டப உரிமையாளர் தெரிவித்துள்ள நிலையில் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது இன்று வெளியாக உள்ள எபிசோடில் அமிர்தாவுக்கு போன் செய்யும் எழில் ஏன் அப்பா, அம்மா இருவரும் நான் செய்யும் காலை எடுக்கவில்லை என கேட்கிறார் அம்மா அப்பா கொஞ்ச நாளாகவே சரியாகவே இல்லை அவர்கள் உன்னுடைய அப்பாவும் அம்மாவும் விவாகரத்து செய்தது குறித்து கவலையில் உள்ளார்கள் எனக் கூறுகிறார். அப்பாவால் தான் இவ்வளவு பிரச்சினையும் என எழில் ஆத்திரமடைகிறார்.

பிறகு எழில் என் மேல் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என கேட்க எனக்கு அதையெல்லாம் பிரச்சனையில்லை எனக்கு நம்பிக்கை இருக்கிறது நான் சமாளித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கிறார் கீழே வரும் எழிலிடம் நீ நம்ப வீட்ல நடக்கிறது எல்லாத்தையும் அமிர்தாவிடம் கூறுகிறாயா என கோபப்படுகிறார்‌. இதனால் கோபமடைந்த எழில் நீயும் வர வர அப்பா மாதிரியே மாறிக்கிட்டு இருக்க எனக் கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய கனவை நிறைவேற போகிறது என்ற மகிழ்ச்சியில் கோபி இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் செழியனிடம் நான் வேலைக்கு போகிறேன் ஆன்ட்டிக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என கூறுகிறார். அதற்கு செழியன் அவங்கதானே சவால் விட்டாங்க அவங்களே பார்த்துப்பாங்க நீ வேலைக்கு எல்லாம் போக தேவையில்லை என கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பாக்யாவிற்கு ஆடர் கொடுத்த மண்டப ஓனரிடம் செல்லும் ராதிகாவின் அண்ணன் மற்றும் கோபி இருவரும் இரண்டாவது திருமணத்திற்கான தேதியை குறிப்பிட்டு மினி ஹால் கேட்கிறார்கள் அந்த தேதியில் ஃப்ரியா இருப்பதாக ஓனர் கூறுகிறார் இதனை பாக்கியாவிடம் போன் செய்து கூற தன்னுடைய கணவனின் இரண்டாவது திருமணம் என்று கூட தெரியாமல் சரி என சொல்லிவிடுகிறார் பாக்யா.