முதல் நாளே கோபியிடம் சத்தியம் வாங்கிய ராதிகா.! கோபியை வறுத்தெடுக்க போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்..

baakiya lakshmi 16
baakiya lakshmi 16

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் தற்பொழுது கோபி ராதிகாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் பாக்கியாவிற்கு துணையாக தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மாறி உள்ளார்கள்.

மேலும் பாக்கியா மண்டபத்தில் கோபியின் முன் தாலியை கழட்டி அவரிடம் கொடுத்து விடுகிறார் மேலும் அனைவரும் மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கிளம்ப ராதிகா கோபியும் கிளம்புகிறார்கள் அப்பொழுது மேலிருந்து இவர்களை பாக்யா பார்க்க ராதிகா கோபியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறார் மேலும் பாக்யா வீட்டிற்கு வர தன்னுடைய மகன் செழியன் மற்றும் எழில் என அனைவரும் இவருக்கு ஆதரவாக பேச பாக்கியா தைரியமாக இருக்கிறார்.

மேலும் வீட்டிற்கு சென்றவுடன் கோபியிடம் ராதிகா பேசாமல் மிகவும் கோபமாக தன்னுடைய ரூமுக்குள் சென்று விடுகிறார். மேலும் கொடூர வில்லியாக மாறிய ராதிகா கோபியிடம் இதற்கு மேல் பாக்கியா மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் பார்க்க கூடாது பேசக்கூடாது என எச்சரிக்கிறார் மேலும் இனியாவையும் பள்ளிக்கூடத்தில் சென்று பார்க்க கூடாது எனவும் சொல்கிறார்.

முதலிரவில் இப்படி நடந்து கொள்கிறாளே என கோபிக்கு ராதிகாவின் மீது வெறுப்பு ஏற்படுகிறது மேலும் பாக்யாவின் நினப்பு கொஞ்சம் கூட வரக்கூடாது என்றும் கோபியிடம் ராதிகா சத்தியம் வாாங்கிக் கொள்கிறார் அதையும் கோபி செய்து கொடுக்க ராதிகா தனது கிடைத்த இரண்டாவது வாழ்க்கையை யாருக்காகவும் விட்டு தரக்கூடாது மிகவும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைக்கிறார் எனவே தற்பொழுது ராதிகா மற்றும் கோபி இருவரும் ஹனிமூன் கிளம்புவதற்கு முடிவு செய்துள்ளார்கள்.

மேலும் இவர்கள் செல்லும் அதே இடத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களும் வர இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மகா சங்கமம் ஒளிபரப்பாக இருக்கிறது மேலும் அனைவரும் கொடைக்கானலுக்கு செல்கிறார்கள் கோபியை பார்த்தவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் வருத்தெடுக்கப் போகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிய வருகிறது.