விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் இந்த முடிவில் கோபியின் அப்பா ராமமூர்த்தி முன்புறமாக இருந்து வருகிறார்.
மேலும் ஈஸ்வரியும் கோபி ராதிகாவின் திருமண நடக்க கூடாது என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் காபினை கொடுக்க அவர் கீழே காபியை தள்ளி விடுகிறார் உன் பையனுக்கு கல்யாணம் நடக்க போகுது என ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் கூற அவர் அதிர்ச்சியடைகிறார் இது இனியாவிற்கும் தெரியவர ஈஸ்வரி, இனியா, ராமமூர்த்தி என மூவரும் ஆட்டோவில் திருமண மண்டபத்திற்கு செல்கிறார்கள்.
அங்கு மணமேடையில் கோபி ராதிகாவின் திருமணம் நடைபெற்று வருகிறது இவர்கள் திருமண மண்டபத்திற்கு வருவதற்கு உள்ளேயே கோபி ராதிகாவின் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார். இதனை பார்த்த இவர்கள் அதிர்ச்சியடைய பிறகு திருமணம் முடிந்த கையோடு கோபி ராதிகாவுடன் ஹனிமூன் செல்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் எதிர்பாராத நிலையில் அந்த மண்டபத்திற்கு பாக்கியா, எழில், இனியா என கோபியின் மொத்த குடும்பமும் வந்துவிடுகிறது இவர்கள் மட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹனிமூன் சென்ற இடத்திற்கு வந்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த எபிசோட் 8 மணியில் இருந்து 9 மணி வரை ஒரு மணி நேரம் ஸ்பெஷலாக மகா சங்கமம் ஒளிபரப்பாக இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை கோபிக்கு பிடிக்காத நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் கோபியை வச்சு செய்ய உள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்க இருக்கிறார் இவ்வாறு 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கோபி ஹனிமூன் சென்றுள்ளது மக்கள் மத்தியில் பெரிதும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது எனவே இவரை சோசியல் மீடியாவில் கழுவி ஊற்றி வருகிறார்கள்.