பாக்யாவை நிக்க வச்சு கேள்வி கேட்ட ராதிகா.! அடுத்தவங்க வாழ்க்கையை பறிக்கிற பழக்கம் எனக்கு இல்லை என கூறிய பாக்யா..

baakiya lakshmi
baakiya lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. பாக்கியா கோபிக்கு விவாகரத்து கொடுத்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் கோபி இருந்து வந்தான்.

பிறகு தற்போது எப்படியோ ராதிகாவின் மனதையும் மாற்றி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்த நிலையில் இவர்களுடைய திருமணம் முதல் திருமணம் போலவே மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. இவர்களின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக மண்டபத்திற்கு வந்த கோபியின் அப்பா ராமமூர்த்தியை கோபி மிகவும் கேவலப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி விட்டு விட்டார்.

இப்படிப்பட்ட நிலையில் காலையில் மணமகளுக்கு காபி கொடுப்பதற்காக செல்வி செல்கிறார் அப்பொழுது செல்வி கோபியை சந்தித்து பாக்கியா பாவம் எனக் கூற உன்ன அவ தூது அனுப்பினாளா என்ன கோபமாக பேசுகிறார். பிறகு ராதிகா காலையில் அலங்காரம் செய்து கொண்டு வெளியில் நின்று கொண்டிருக்கிறார் அப்பொழுது எதர்ச்சியாக பாக்யா காபி கொடுப்பதற்காக வருகிறார்.

அந்த சமயத்தில் ராதிகா பாக்கியாவிடம் பல கேள்விகள் கேட்க நீங்க அப்பாவி, நல்லவங்கன்னு நினைச்சேன் ஆனா இப்ப தான் தெரியுது நீங்க ரொம்ப புத்திசாலி எனக் கூறிவிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த தானே நீங்க இங்க வந்து இருக்கீங்க என நான் உங்களுக்கு சந்தோஷமா இருக்கிறது பிடிக்கலையா என்ன ராதிகா கேட்கிறார். அதற்கு பாக்கியா அடுத்தவங்க வாழ்க்கையை பறிக்க, கெடுக்க எனக்கு தெரியாது உங்களுக்கு இப்ப வேலை இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கிறது என பாக்யா கூறுகிறார்.

இதனைக் கேட்டவுடன் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் ஈஸ்வரி மற்றும் இனியா என கோபியின் பிள்ளைகள் இந்த திருமணத்தை நிறுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.