கோபியின் திருமணத்தில் குட்டையை குழப்ப அதிரடியாக கிளம்பிய செழியன், இனியா.! பரபரப்பில் இன்றைய எபிசொட்

0
baakiyalakshmi 2
baakiyalakshmi 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மேலும் நெட்டிசன்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. அதாவது தன்னுடைய சொந்த புருஷன் கல்யாணத்திலேயே பாக்யாவிற்கு சமைக்கும் நிலைமை வந்துள்ளது இதெல்லாம் அநியாயம் என கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி ராதிகாவின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முதல் நாள் ரிசப்ஷன் நடைபெற்று வருகிறது இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக கோபியின் அப்பா ராமமூர்த்தி மண்டபத்திற்கு வந்து கோபியின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க அவரை கீழே தள்ளி விடுகிறார். பிறகு பாக்யா செல்வி இருவரும் அவரை பிடித்து கொள்கிறார்கள்.

பாக்யா தன்னுடைய மாமனாரை பேசி அமைதிப்படுத்த கோபியிடம் உங்களுக்கு உங்கள் மகனால் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என வேண்டிக்கோங்க என கூறிவிட்டு தன்னுடைய மாமனாரை அழைத்துக் கொண்டு சமையல் செய்யும் இடத்திற்கு செல்கிறார். அங்கு செல்வி, ராமமூர்த்தி இருவரும் பாக்யாவை சமைக்க வேண்டாம் எனக் கூற பாக்யா இந்த ஆர்டர் எனக்கு ரொம்ப முக்கியம் எனக் கூறுகிறார்.

பிறகு இதனை எல்லாம் பார்த்த ராதிகாவின் அண்ணன் ஓனரிடம் இந்த சமையலாடர் எங்களுக்கு வேண்டாம் எனக் கூற பிறகு பாக்கியா கெஞ்சி கூத்தாடி ஓனரிடம் ஆர்டரை மீண்டும் பெறுகிறார் இதனைத் தொடர்ந்து ராதிகாவின் அம்மா கோபியிடம் இதற்கு மேல் யாராவது வந்து சண்டை போட்டால் அது உங்களுடைய பொறுப்பு என கோபியை முறைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் வீட்டிற்கு சென்ற செல்வி மண்டபத்தில் நடந்த அனைத்து விஷயங்களையும் இனியா, எழில், ஈஸ்வரி என அனைவரிடமும் கூற இனியா அப்பா எப்படி இப்படியெல்லாம் செய்யலாம் எனக் கூறிவிட்டு கல்யாணத்தை நிறுத்துவதாக கூறி கிளம்புகிறார்.

எழிலும் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என கிளம்ப இவரை தொடர்ந்து இதனைத் தெரிந்துக் கொண்ட செழியனும் மண்டபத்திற்கு கிளம்புகிறார்கள் இவ்வாறு கோபியின் மூன்று பிள்ளைகளும் மண்டபத்திற்கு கிளம்ப எழில் உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லையா என கூறி சண்டை போடுகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.