கோபியை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் ராதிகா.! என்னடா உன்னுடைய நிலைமை இப்படி ஆயிடுச்சே என்ன கலாய்க்கும் அப்பா..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து கோபி ஆட்டம் போட்டு வந்த நிலையில் அவரை அடக்கும் வகையில் பல காட்சிகள் அரங்கேறி வருகிறது. எனவே ரசிகர்கள் இதை தான் எதிர்பார்த்தோம் என கூறி வருகிறார்கள். அதாவது அடக்க ஒடுக்கமாக குடும்ப பெண்ணாக இருந்து வரும் பாக்கியாவை விட்டுவிட்டு தன்னுடைய கல்லூரி காதலியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தான் கோபி.

இவ்வாறு பல முயற்சிகளுக்குப் பிறகு தற்பொழுது ராதிகா கோபி இருவருக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்று முடிந்து விட்டது ஆனால் திருமணத்திற்கு பிறகு படாத பாடுபட்டு வருகிறார் கோபி. காலையில் எழுந்தவுடன் காபி, சாப்பாடு என்ன கோபியை விழுந்து விழுந்து கவனித்தார் பாக்யா ஆனால் இது எதுவுமே செய்யாமல் ராதிகா தன் வேலையை மட்டும் செய்து வருகிறார்.

இந்நிலையில் ஜாக்கிங் சென்றபொழுது கோபிக்கு வீட்டில் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது அதாவது ராதிகா நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கோபி கேட்க தயங்குகிறார் ராதிகாவிடம் காபி வேண்டும் என கேட்க அதற்கு பெரிதாக ராதிகா கொல்லாமல் முறைத்து விட்டு தொடர்ந்து நியூஸ் பேப்பரை படித்துக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் கோபி ராதிகாவிடம் காபி கேட்கிறார் அதற்கு ராதிகா கடையில் சென்று பால் வாங்கிட்டு வாங்க என கூறுகிறார்.

அதற்கு கோபி என்னது பால் வாங்கிட்டு வரணுமா என கேட்கிறார். அதன்பிறகு வேறு வழி இல்லாமல் கடைக்கு சென்று பால் வாங்கி வரும்பொழுது கோபியின் தந்தை வெளியில் போன் பேசிக் கொண்டிருக்கிறார் என்னடா உன் நிலைமை இவ்வளவு மோசமா ஆயிடுச்சு என போனில் பேசுவது போல் கலாய்த்து தள்ளுகிறார். ஒருவழியாக அப்பாவிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு வருகிறார்.

ராதிகா காலையில் சாப்பாடுக்கு உப்புமா செய்துள்ளார் புது மாப்பிள்ளை என்பதால் கறி பிரியாணி என சாப்பிடலாம் என கோபி நினைத்து வரும் நிலையில் அவருக்கு எல்லா விஷயங்களும் ஏமாற்றமாகவே இருந்து வருகிறது இவ்வாறு தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம் என கோபி விரைவில் உணர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.