கோபியை எட்டி உதைத்த ராதிகா மற்றும் மையூ.! தன்னுடைய தந்தைக்கு சரியான பாடம் புகட்டிய எழில்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் சுவாரசியமான கதைய அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் பாக்யாவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக பாக்கியா குடும்பத்தினர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் தங்கியிருக்கிறார்

இதன் காரணமாக அவருடைய குடும்பத்தினர்கள் அனைவரும் கோபியின் மீது மிகவும் கோபமாக இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்த நிலையில் ராதிகா பெரிதாக கோபியை கண்டுக்காமல் இருந்து வருகிறார். அந்த வகையில் நேற்று கோபி பசியால் தவித்து வந்த நிலையில் ராதிகா எதுவும் சமைக்காமல் இருந்து வருகிறார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு சின்ன பவுலில் கொஞ்சமாக மேகி செய்து தருகிறார் இதனை பார்த்தவுடன் அதிர்ச்சியடைகிறார் கோபி. இதனைத் தொடர்ந்து ராதிகாவிடம் ரொமான்ஸ் செய்யலாம் என நினைத்து ரூமுக்கு போக கட்டிலில் மகளுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் ராதிகா. அதுக்குள்ள தூங்கிட்டியா நான் எங்க படுக்கிறது என மயூவிடம் கொஞ்சம் இடம் கேட்க அவள் எட்டு உதைக்க கோபி கீழே விடுகிறார் பிறகு ராதிகாவிடம் கேட்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க கோபி என்ன சொல்ல வேறு வழியில்லாமல் தரையில் படுத்து தூங்குகிறார்.

இதனை எல்லாம் நினைத்துப் பார்த்தேன் என் வீட்ல எவ்வளவு பெரிய பெட் இருக்கும் அதையெல்லாம் விட்டுட்டு என் நிலைமை இப்படி ஆயிடுச்சு என புலம்புகிறார். அடுத்த நாள் பாக்யா தன்னுடைய குடும்பத்தினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் எழில் ஜாக்கிங் செல்ல கிளம்புகிறார் கோபியும் ஜாக்கிங் வருகிறார்.

எழில் வேகமாக ஓடி வந்ததை பார்த்தது கோபி தப்பு கொடுத்து ஓடி வந்து நிற்க வைத்து நான் 20 வயசுல இருந்தே ஓடிக்கிட்டு உடம்பை பிட்டா வச்சிக்கிட்டு இருக்கேன் ரெண்டு பேருக்கும் போட்டி வச்சுக்கலாமா என கோபி கேட்க எதில் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என கூறுகிறார் பயமா.? உன்னையும் என்னையும் நிக்க வச்சு பார்த்தா நீ என் தம்பின்னு சொல்லுவாங்க எனக்கு கூட பிறகு இருவரும் போட்டி வைத்து ஓடுகின்றனர்.

இந்த போட்டியில் எழில் ஜெயிச்சு விட பிறகு இனிமேல் நீங்க தோத்துக்கிட்டு தான் இருப்பீங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு வீட்டிற்கு வந்த கோபி பழக்க தோஷத்தில் பாக்யா பிளாக் காபி என கேட்க பிறகு இது ராதிகாவின் வீடு என நினைவுக்கு வர பிறகு அமைதியாகி விடுகிறார் மேலும் ராதிகாவிடம் ஒரு காபி கிடைக்குமா என கேட்க அவர் முறைக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.