ராதிகாவை வெறுக்கும் கோபி.! பாக்கியாவை நினைத்து பெருமைப்பட்டு இப்ப என்ன பிரயோஜனம்..

baakiyalakshmi 12
baakiyalakshmi 12

பிரைம் டைமில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது நாளுக்கு நாள் கோபி அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பாக்யா தன்னுடைய குடும்பத்துடன் தங்கியிருக்கும் வீட்டின் எதிரில் தன்னுடைய இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் வாடகை வீட்டில் தங்கி எடுத்திருக்கிறார்.

பாக்யாவை எப்படியாவது வெறுப்பு ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கோபி இருந்து வரும் நிலையில் அதையெல்லாம் பெரிதாக பாக்கியா எடுத்து கொள்ளாமல் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் கோபி ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

அப்பொழுது கோபியை கண்டு கொள்ளாமல் ராதிகா யாருடனோ போனில் பேசிக் கொண்டு இருக்கிறார் பிறகு மையு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் எனக் கூற அங்கிள் சூப்பரா சொல்லி தருவாரு என ராதிகா கூறிவிடுகிறார் அப்பொழுது கோபி பசி தாங்க முடியாமல் இருக்கும் நிலையில் மையுவும் எனக்கு பசிக்குது உங்களுக்கு பசிக்கிறதா என கேட்க ஆமாம் என கூறுகிறார்.

அதன் பிறகு ராதிகா ஆர்டர் பண்ணி சாப்பிடலாம் எனக் கூற கோபியை அதிர்ச்சியடைகிறார். பிறகு ராதிகா சமையல் செய்வதற்காக சமையலறைக்குள் செல்கிறார் இதனை தொடர்ந்து மறுபுறம் பாக்யா தனக்கு சமையலாளர் கிடைத்துள்ள நிலையில் அனைவருக்கும் ட்ரீட் வைக்க வேண்டும் என சிக்கன் பிரியாணி என பல வகையான உணவுகளை சமைத்து இருக்கிறார் இந்த பிரியாணி வாசனை கோபியின் வீட்டிற்கு வரையும் செல்கிறது.

எனவே ராதிகா பிரியாணி தான் சமைத்து வைத்திருப்பார் என்ற சந்தோஷத்தில் கோபி இருக்கிறார் மேலும் டைனிங் டேபிள் சாப்பிட வரும் கோபி பெரிய அதிர்ச்சி அடைகிறார் அதாவது சின்ன பவுலில் நூடுல்ஸ் போன்ற ஏதோ ஒரு உணவை சமைத்து தருகிறார் இதனை சாப்பிட கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் கோபி எப்படியோ சாப்பிடுகிறார். இவ்வாறு பாக்கியா கோபிக்காக ஒன்றும் ஒன்றாக பார்த்து சமைத்து தந்த நிலையில் தற்பொழுது ராதிகா கோபியை சுத்தமாக கண்டுக்கவில்லை.