கோபியை கொல்ல துணிந்த எழில்.! பதட்டத்தில் குடும்பத்தினர்கள்..

baakiya-lakshmi2
baakiya-lakshmi2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி கோபி ராதிகாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் இவர்களுடைய சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதாவது முதலில் ஹானிமூன் கொண்டாட வேண்டும் என்பதற்காக ராதிகாவை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் சென்று இருந்தால் கோபி அங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைத்த நிலையில் பாக்கியா குடும்பத்தினர்கள் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் வந்து இவர்களை அசிங்கப்படுத்தினார்கள் மேலும் இதனால் ராதிகா கொடூர பில்லியாக மாறி இருக்கிறார்.

எனவே அனைவரையும் எப்படி பழி வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். வீடு திரும்பிய பிறகு வீட்டிற்கு வந்தவுடன்  ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் இருவரும் தங்களுடைய வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். இதனால் ராதிகா என்னை அசிங்கப்படுத்தின உங்கள் முன்பு நன்றாக வாழ்ந்த காட்ட வேண்டும் என கோபியிடம் கூறுகிறார்.

மேலும் கோபி பாக்கியா குடும்பத்தினர் இருக்கும் வீட்டிற்கு எதிரில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார். கோபி, ராதிகா, மயூ அழைத்துக் கொண்டு வர காலையில் பாக்யா கோலம் போடும் பொழுது இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் மேலும் செழியன் வாக்கிங் சென்று விட்டு வர கோபி அவரை அழைத்து பேசுகிறார் அந்த நேரத்தில் மையூ கோபியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று விடுகிறார்.

பிறகு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது செழியன் அனைவரிடமும் இதை கூறிவிட்டு அழுகிறார் எனவே அனைவரும் அவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என பேசிக்கொள்கிறார்கள் இதனை கேட்டவுடன் எழில் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு செல்ல அனைவரும் பதறுகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.