கோபிக்கு கண்டிஷன் போட்ட ராதிகா.! தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் பாக்யா..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது அனைவரும் கொடைக்கானல் சுற்றுலாவிற்கு சென்று உள்ளார்கள் சுற்றி முடித்த நிலையில் தற்போது வீடு திரும்பி உள்ளார்கள் இதன் காரணமாக ஜெனி யூடியூப் பார்த்து சட்னி அரைக்கிறார் பிறகு இட்லி ஊத்த ஆரம்பிக்க செழியன் அந்த நேரத்தில் வந்து ஜெனியுடன் ரொமான்ஸ் செய்து அனைத்தும் மாவையும் கீழே தள்ளி விட்டு விடுகிறார்.

இதன் காரணமாக செழியன் நான் ஹோட்டலில் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன் என கூறிவிட்டு சென்று விடுகிறார் அந்த நேரத்தில் அனைவரும் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள் எனவே ஜெனி எப்படியோ அனைவரையும் உங்களுக்காக நான் சாப்பாடு சமைத்து வைத்திருக்கிறேன் போய் ரெடியாகிட்டு வாங்க என மேலே அனுப்பி விடுகிறார். பிறகு செழியன் சாப்பாடு எடுத்து வந்ததும் தான் சமைப்பது போலவே மத்த பாத்திரங்களில் மாற்றுகிறார்.

இதனால் எழிலுக்கு ஜனனியின் மீது சந்தேகம் வருகிறது எனவே தன்னுடைய அம்மாவிடம் இதனைப் பற்றி கூறுகிறார். பிறகு செழியன் இந்த மூணு நாளும் ஜெனி தான் சமைச்சா மிகவும் சூப்பரா இருந்தது என கூற உடனே ஜெனி நான் சமைக்க வில்லை என முன்பே சொல்லி விட்டேன் நீ கொஞ்ச நேரம் சும்மா இரு என கூறுகிறார்.

இவ்வாறு கோபில்லை என்றாலும் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக பேசி வருகிறார்கள் இதனை தொடர்ந்து மற்றொருபுறமும் கோபி ராதிகா இருவரும் வீட்டிற்கு சென்றவுடன் இவர்கள் முகத்தைப் பார்த்துவிட்டு ராதிகாவின் அம்மா என்ன ஆச்சு என கேட்கிறார் அதற்கு கூப்பி அதை எல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லி சமாளிக்கிறார்.

பிறகு கோபி ராதிகா இருவரும் ரூமிற்கு சென்றவுடன் ராதிகா என்னை அசிங்கப்படுத்தினவங்க முன்னாடி நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என கோபியிடம் கூற கோபி ராதிகாவை சமாளிக்க முயற்சிக்கிறான். இவ்வாறு போகப்போக கோபி நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என உணர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.