கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வச்சா எப்படி.! பாக்யாவை மனைவியாக ஏற்றுகொண்ட கோபி..? உச்சகட்ட கோவத்தில் ராதிகா

BAAKIYA-LAKSHMI'
BAAKIYA-LAKSHMI'

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது முக்கிய சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து ஒரு மணி நேர ஸ்பெஷலாக ஒளிபரப்பாகி  வருகிறது. இந்த இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது கோபி தன்னுடைய வீட்டில் ராதிகாவுடன் முதலிரவு கொண்டாட முடியாத நிலையில் எப்படியாவது இவரை ஹனிமூன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்கு அவ்வாறு பங்க்ஷன் மற்றும் ஹனிமூன் கொண்டாட வந்துள்ளார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில் அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் மூர்த்தியின் குடும்பத்தினர்கள் மற்றும் பாக்யா குடும்பமும் கொடைக்கானலுக்கு வந்துள்ளார்கள்.

எனவே இவர்கள் இருவரிடமும் கோபி மாட்டிக்கொண்டு முழித்து வருகிறார் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் மற்றவர்கள் கோபி மற்றும் ராதிகாவை அவமானப்படுத்தி வருகிறார்கள் எனவே ராதிகா மிகவும் கோபமாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது அவார்ட் ஃபங்ஷனுக்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு பாக்யாவும் தன்னுடைய மாமனாரும் வந்துள்ளார் அப்பொழுது கோபி மேடைக்கு அழைத்து அவார்ட் கொடுக்க அதில் பேசிய பொழுது நண்பர் இந்த வெற்றிக்கு அவரது மனைவி தான் காரணம் என்று கூறுகிறார். அவரை மேடைக்கு அழைக்கவும் ஆசைப்படுகிறேன் என்று சொன்னவுடன் ராதிகா ஆர்வமாக வர முயற்சிக்கிறார் ஆனால் பாக்யா மேடைக்கு வாருங்கள் என கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் வேறு வழியில்லாமல் பாக்யா மேடைக்கு சென்று பேசுகிறார் கோபியும் வேறு எதுவும் பேசாமல் இருந்து வரும் நிலையில் இதனால் ராதிகா உச்சகட்ட கோபமடைகிறார். மேலும் இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது வீட்டிற்கு சென்று விடலாம் என கூற கோபி எப்படியாவது ராதிகாவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.