விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தற்பொழுது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகாசங்கமாக ஒளிபரப்பி வருகிறார்கள் எனவே தற்போது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்ட தகவல் மூர்த்திக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் இதனைப் பற்றி எழில் நடந்த அனைத்து விஷயங்களையும் மூர்த்தியிடம் கூற அதற்கு கண் கலங்குகிறார். பிறகு மூர்த்தி கோபியை சந்தித்து சண்டை போட்ட நிலையில் ராதிகா இந்த அவமானம் தேவைதானா ஊருக்கு போகலாம் என கோபியிடம் சண்டை போடுகிறார் கோபியும் ராதிகாவை சமாதானப்படுத்துவதற்காக கெஞ்சு கொண்டிருக்கிறான்.
இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மற்றும் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்கள் இணைந்து இரவில் மிகவும் மகிழ்ச்சியாக ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். அந்த நேரத்தில் கோபி மற்றும் ராதிகா இருவரும் அங்கு வந்து அமர்கிறார்கள் அப்பொழுது இனியா உடனே அம்மாவை பாட சொல்லுங்கள் என கூறுகிறார் இது கோபி என் காதில் விட கழுதை கத்திர மாதிரி இருக்கும் என நினைத்து மனதிற்குள் சிரிக்கிறார்.
ஆனால் கோபிக்கு அதிர்ச்சி தரும் வகையில் பாக்கியா மிகவும் அருமையாக பாடுகிறார் ஒரு நிமிடம் கோபி தன்னையே மறந்து பாக்யா பாடியதை நினைத்து கைதட்ட ஆரம்பிக்கிறார் இதனால் ராதிகா மிகவும் கோபப்படுகிறார் மேலும் என் முன்னாடியே பாக்யா பாடியதை ரசிக்கிறீர்களா என கேட்டு விட்டு அங்கிருந்து கோபமாக செல்கிறார்.
இவ்வாறு ராதிகா பாக்யா இருவரிடமும் மாட்டிக் கொண்டு கோபி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறான். பிறகு மீண்டும் ரூமிற்கு சென்று ராதிகாவை சமாதானப்படுத்தி கெஞ்சு கொண்டிருக்கிறார். இவ்வாறு பல பிரச்சனைகள் வர இதற்கு மேல் தான் கோபியை வைத்து மிகவும் சுவாரசியமான கதை அம்சத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.