விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது கோபி ராதிகா இருவருக்கும் இரண்டாவது திருமணம் முடிந்துள்ள நிலையில் இந்த சீரியலை ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் பாக்கியாவிற்கு ஆதரவாக அவருடைய மகன்கள் இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தனக்கு அவார்ட் தருவதாக கூறி ராதிகாவை கொடைக்கானலுக்கு ஹனிமூன் அழைத்து சென்றிருக்கிறார். மேலும் அதே சமயம் தூக்கம் தாங்க முடியாமல் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சோகமாக இருந்து வந்த நிலையில் எழில் அவர்களை சுற்றிக் காமிகலாம் என்பதற்காக கொடைக்கானல் அழைத்து வந்திருக்கிறார்.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் தனம், மூர்த்தி மற்றும் கண்ணன், ஐஸ்வர்யா நான்கு பேரும் கொடைக்கானலுக்கு வந்திருக்கிறார்கள் ஏற்கனவே பாக்யாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சொந்தக்காரர்கள் என்பதால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றார்கள்.
மேலும் அதே இடத்தில் தான் கோபி ராதிகாவும் தங்கி இருக்கிறார்கள் ராதிகா தன்னுடைய மகளுடன் அடிக்கடி போன் பேசிக்கொண்டு இருப்பதால் 50 வயதில் காதல் குறையாத கோபி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்ய ஆர்வமாக இருக்கிறார் மேலும் ராதிகாவும் இவ்வாறு நினைக்க பிறகு எதிர்பாராத விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கண்ணன் கோபியை ஹோட்டலில் பார்த்து விடுகிறார்.
எனவே கோபியை பார்த்தவுடன் இவர் ஓட பிறகு ராதிகாவை பார்க்கிறார் இவ்வாறு நடந்த அனைத்தையும் மூர்த்தியிடம் கூற மூர்த்தி மிகவும் கோபப்படுகிறார். மேலும் இவர்கள் அனைவரும் கோபியை சந்தித்து பேச ராதிகா கோபியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் இவ்வாறு தற்பொழுது தான் மகா சங்கமம் சூடு பிடித்துள்ளது எனவே கோபி ராதிகா மற்றும் தன்னுடைய குடும்பத்தினர்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார்.