வாழ்க்கை நாசமா போச்சே என புலமும் கோபி.! தன்னுடைய அப்பா மீது இருக்கும் கோபத்தை மையூ மீது காட்டும் இனியா..

0
baakiyalakshmi 24
baakiyalakshmi 24

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் இருவரும் பாக்யாவின் வீட்டிற்கு எதிரில் வாடகைக்கு வந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் ராதிகா கோபியை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார். அந்த வகையில் வயதான கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அதனை கிண்டல் செய்யும் கோபியின் அப்பா செழியனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பதை கூறிவிட்டு அதன் பிறகு நீ தாத்தாவாகப் போகிறாய் என்பதையும் கிண்டல் செய்து வருகிறார்.

இதனால் அசிங்கப்பட்ட போன கோபியை ராதிகா தொடர்ந்து அவமானப்படுத்தும் படி பேசி வருகிறார் இதனைக் கேட்டவுடன் கோபி என்னுடைய வாழ்க்கை நாசமா போயிடுச்சு என  புலம்புகிறார். பாக்யாவின் முன்பு ராதிகா கோபியுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என கூறிவிட்டு தான் எதிர் வீட்டில் எதிரில் குடியேறினார்கள்.

ஆனால் அதற்கு எதிர் மாறாக பாக்யா மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் இதனால் கோபத்தில் ராதிகா பொம்மை உள்ளிட்டவற்ற எறிந்து கோபப்படுகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஒருபுறம் இதற்கு முன்பு ராதிகாவின் மகள் இனியாவிடம் நெருங்கி பழகியவர் தான் ஆனால் தற்பொழுது மையூ இனியாவிடம் பேச இனியா உடனே மையூவை கீழே தள்ளி விடுகிறார்.

இவ்வாறு தன்னுடைய அப்பா மீது இருக்கும் கோபத்தை ராதிகாவின் மகள் மீது காட்டுவதால் ராதிகா இனியாவால் தன்னுடைய மகளின் மனம் இவ்வளவு கஷ்டப்படுகிறது என நினைத்து கண்கலங்குகிறார். இதனை கோபியிடம் கூறி கோபப்படுகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜெனி கர்ப்பமாக இருக்கும் நிலையில் எழிலின் தயாரிப்பாளரின் மகள் ஷாமிலி வீட்டிற்கு வந்து வாழ்த்துக்களை கூறுகிறார்.

அப்பொழுது ஈஸ்வரிக்கு ஷாமிலியை எழிலுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற ஆசை ஏற்படுகிறது மேலும் எழிலுக்கு அமிர்தாவை தான் பிடித்துள்ள நிலையில் இதுகுறித்து எபிசோடுகள் விரைவில் வெளியாக இருக்கிறது.