விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு பாக்யா தன்னுடைய குடும்பத்திற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாக்யாவின் குடும்பத்தை சீண்ட வேண்டும் என்பதற்காக கோபியை உசுப்பேத்தி விட்டு ராதிகா பாக்கியா வீட்டிற்கு அருகில் கோபியுடன் வசித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் கோபிக்கு வரும் கடிதத்தை அவருடைய குடும்பம் வாங்க மறுத்த நிலையில் ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற வேண்டும் என ராதிகா கூறுகிறார் எனவே கோபி ரேஷன் கார்டை வாங்குவதற்காக பாக்யாவிடம் சென்ற பொழுது அவருடைய அம்மா ரேஷன் கார்டு எல்லாம் கொடுக்க முடியாது என கூறுகிறார்.
இதனை ராதிகாவுடன் சொல்லும் அப்பொழுது அவர் கோபியை கடுமையாக திட்டுகிறார். கல்யாணத்துக்கு முன்பு இருந்த ராதிகாவை தொலைத்ததாகவும் மஞ்ச கயிறு ஏறிய பிறகு பைத்தியம் பிடித்தது போல் ஆகி விட்டாயா என்று ராதிகா கழுத்தில் இருக்கும் தாலிக்கயிற்றை எடுத்து கோபி பாவமாக பேசுகிறார். அதன் பிறகு ராதிகாவிடம் எப்படியாவது நான் ரேஷன் கார்டுடன் வருகிறேன் என்று மறுபடியும் பாக்யாவின் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு மிகவும் திமிராக கோபி கேட்க அதில் தன்னுடைய குடும்பத் தலைவராக இருக்கும் புகைப்படத்தை பார்த்து மற்றவர்களுடன் தன்னை நியாயப்படுத்துகிறார். கோபத்தில் பாக்யாவும் நீயெல்லாம் ஒரு குடும்ப தலைவனா என்று அசிங்கமாக பேசுகிறார். மேலும் இதனை எல்லாம் பொருட்படுத்த கோபி எதற்கு தேவையில்லாமல் வீட்டை விட்டு ஓடினார்.
மேலும் ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யலாம் என நினைத்த கோபிக்கு லாஸ்டில் திட்டும், சண்டையும் தான் மிஞ்சியது. கடைசியாக பாக்யா நான் உண்ணும் உன்னுடைய பொண்டாட்டி கிடையாது என்னிடம் கத்துவதற்கு என கூறிவிட்டு இந்த சண்டையை முடிக்கிறார் எனவே இவர்கள் ரேஷன் கார்டு கொடுக்காத நிலையில் ராதிகா கோபியை தரக்குறைவாக நடத்துகிறார்.