விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங் நடைபெறுகிறது அங்கு இனியாவை பார்த்து ஸ்கூலில் அப்படியே நிற்க கொஞ்ச நேரத்தில் மையூ வந்து வாங்க டாடி என கையைப் பிடித்து அழைத்து சொல்கிறார்.
இதனைப் பார்த்தவுடன் இனியா அதிர்ச்சடைகிறார் கோபி அந்த இடத்தை விட்டு சென்றதும் அக்கம் பக்கத்தினர்கள் இனியாவிடம் உங்க அப்பா வேற திருமணம் செய்து கொண்டாங்களா என இனியாவிடம் கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நிற்கிறார் பிறகு பாக்கியா டீச்சரிடம் பார்த்து பேச இந்த பக்கம் ராதிகா கோபி பேச அப்பொழுது மிஸ் இது யார் என்ன கேட்க ராதிகா என்னோட ஹஸ்பண்ட் மயோட அப்பா என கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து கையெழுத்து போட்டுவிட்டு கோபி இனியாவுக்காக எப்பொழுதும் நான் தான் வருவேன் நான் போயிட்டு பேசிட்டு வந்துடுறேன் என சொல்லிவிட்டு இங்கு வந்து இனியாவிடம் டாடி நான் வரட்டா எனக் கேட்க அதற்கு அம்மா பேசிட்டாங்க வேண்டாம் என கூறுகிறார். அதன் பிறகும் மையூ கீழே வந்ததும் நீங்க எனக்கு யார் என கேட்க டாடி என சொல்ல அப்பொழுது இனியா அக்காவுக்கு நீங்க டாடி அதுக்கப்புறம் உனக்கு டாடி என சொல்லி காருக்குள் அனுப்பி வைக்கிறார்.
பிறகு ராதிகா கோபியை பயங்கரமாக கோபப்படுகிறார் என்ன ஆச்சு ராதிகா என்ன கேட்க உங்க மேல தான் பயங்கர கோபத்தில் இருக்கேன் ஸ்கூலுக்கு வந்த வேலையை பார்க்க வேண்டியதுதானே நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை என ராதிகா கோபப்படுகிறார்.
பிறகு இனியாவை சமாதானப்படுத்தி பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்ற அங்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி தருகிறார் மேலும் இனியாவிற்கு அப்பா இல்லாத குறை இருக்கக் கூடாது என்பதற்காக மிகவும் பாசமாக இருந்து வரும் நிலையில் அதனை புரிந்து கொண்டு இனியாவும் தன்னுடைய அம்மாவின் மீது மிகவும் பாசமாக இருக்கிறார்.