அப்பா இல்லாத குறையை தீர்ப்பதற்காக இனியாவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் பாக்யா.! கோபியின் மீது ஆத்திரமடையும் ராதிகா..

baakiyalakshmi-12
baakiyalakshmi-12

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது முக்கியமாக டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பிறகு ராதிகாவுடன் பாக்கியாவின் வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று பள்ளியில் நடக்கும் பேரன்ட்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ராதிகாவும் அவருடைய மகளையும் காரில் கோபி அழைத்துச் செல்லும் பொழுது பாக்யா தட்டு தடுமாறி தன்னுடைய மகளை ஸ்கூட்டியில் அழைத்து செல்கிறார். பிறகு பாக்கியா வண்டியை எடுத்தவுடன் ஏறி உட்காருகிறார் அப்பொழுது பாக்கியா தடுமாறும் நிலையில் அதனை பார்த்து கோபி பரிதாபப்படுகிறார்.

கோபி பாக்யாவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா கோபியை பார்த்துவிட பிறகு கோபப்படுகிறார் ஒரே தெருவில் இருந்து கொண்டு இரண்டு மனைவிகளையும் சமாளிக்க முடியாமல் கோபி முழிக்கிறார். இனியா மயூ இருவரும் ஒரே ஸ்கூலில் படித்து வரும் நிலையில் மையூவிற்க்காக பேரன்ட்ஸ் மீட்டிங்க்கு வந்திருக்கிறார். இதனைப் பார்த்த இனியாவின் தோழிகள் உடனே இனியாவிடம் இதனை பற்றி கேட்கிறார்கள்.

உன்னுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா என்று கேட்கும் பொழுது இனியாவிற்கு பெரும் சங்கடமாக இருக்கிறது சமாளிக்கும் பாக்யா இனியாவின் தோழிகளிடம் இதனைப் பற்றி அவரிடம் கேளுங்கள் என்று கூறிவிட்டு திரும்பி விடுகிறார். பிறகு பாக்கியா தன்னுடைய மகள் இனியாவை ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்று அவருக்கு வேண்டி அனைத்தையும் வாங்கி கொடுக்கிறார்.

மேலும் இதற்கு முன்பு பாக்யா பேலன்ஸ் மீட்டிங்கில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தனக்குத்தானே பேசி மகளுக்கு தந்தையின் கவலை வந்து விடக்கூடாது என ஒரு அம்மாவாக அவர் தன்னுடைய மகளின் நலனுக்காக ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்து செய்து வருகிறார். இவனை பார்க்கும் இனியாவிற்கு பாக்யாவின் மேல் அதிகளவு பாசம் ஏற்படுகிறது. இவ்வாறு கோபி செய்வதன் மூலம் பாக்கியாவின் குடும்பத்தினர்களுக்கு அதிகமாக பாக்யாவின் மேல் அன்பு ஏற்படுகிறது.