விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது பாக்யாவும் ஜெனியும் கேண்டீன் ஆர்டர் வாங்குவதற்காக புது ஆபீஸ் வந்திருக்கின்றன அது ராதிகா அலுவலகம் என தெரியாமல் இருவருக்கும் ஆர்டர் வழங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இனியா சென்று கொண்டிருந்த வேன் திடீரென விபத்தில் சிக்கி உள்ளது. இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடில் பாக்கியா ஜெனி இருவரும் புது அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது வர சொல்ல இருவரும் உள்ளே செல்கின்றனர் அங்கு ராஜசேகர் இருக்கிறார். அப்பொழுது ராஜசேகரன் இவங்க தான் நான் சொன்னவங்க என்ன கூற பிறகு உடனே அந்த ஆபிஸர் சாப்பாடு நன்றாக இருக்க வேண்டும் அதுதான் எனக்கு முக்கியம் என சொல்ல பாக்கியா அதெல்லாம் சரியா செய்து விடலாம் என கூறுகிறார்.
பின் ஜெனி எங்களிடம் 25 பேர் வேலை பார்ப்பதாக சொல்கிறார் பாக்கியா தடுக்க வர பிறகு ஜெனி பாக்யா கையை பிடித்து கொள்கிறார். மேலும் ராஜசேகர் அவங்க கொடுக்கும் ஆர்டரை செய்தால் போதும் என கூறுகிறார் இந்த நேரத்தில் அந்த ஆபிசர் பாக்கியாவிடம் ஒரு ஏழு லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் எனக் கூற உடனே ஜெனி அதெல்லாம் பிரச்சனை இல்லை என சொல்கிறார் ஆனால் பாக்யாவுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது.
வெளியில் வந்த பாக்யா ஜெனி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இது ராதிகா வேலை செய்யும் அலுவலகம் என தெரிய வருகிறது பாக்கியா ராதிகாவை பார்க்கவில்லை என்றாலும் ராதிகா பாக்யாவை பார்த்து விடுகிறார். இந்நிலையில் உடனே ராதிகா ஆபீஸரிடம் சென்று யார் அவங்க என கேட்க இவங்கள உங்களுக்கு முன்பே தெரியுமா என கேட்கிறார் அதற்கு ராதிகா தெரியும் என கூற இவங்கதான் நம்ம கேண்டின நடத்த போறாங்க என கூறுகிறார். ராதிகா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்.
இந்நிலையில் கோபியும் ராதிகாவும் ஹோட்டலில் சந்தித்துக் கொள்கின்றனர் அந்த நேரத்தில் கோபி இனியாவிடம் நடந்த பிரச்சனைகளுக்கு மன்னிப்பு கேட்கிறார் இனிமேல் இப்படி நடக்காது என சொல்ல உடனே கோபி மயூவை என் மகள் என நீ பிரித்து பார்ப்பதே என சொல்கிறார் பின் ராதிகா பாக்யா அவருடைய அலுவலகத்தில் வந்தது பற்றி சொல்கிறார் எனவே கோபி அவளுக்கு கேட்டரிங் ஆர்டர் கொடுக்கக் கூடாதுன்னு அந்த ஆபீஸரிடம் சொல்லு என கூற நான் அப்படி செய்ய மாட்டேன் என ராதிகா சொல்ல அந்த நேரம் கோபிக்கு போன் வந்து வருகிறது அதில் இனியாவிற்கு விபத்து நடந்ததாக சொல்ல உடனே கோபி அங்கிருந்து கிளம்புகிறார்.
இதனைத் தொடர்ந்து பாக்யா, ஜெனி இருவரும் வீட்டிற்கு வந்து கேட்டரிங் ஆர்டர் கிடைத்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது பாக்யாவிற்கு நிகிலா அம்மா அப்பா போன் செய்கிறார் அப்பொழுது வாக்கியாவிடம் இனியாவும் டூர் சென்று இருக்கிறாளா என கேட்க ஆமா என சொல்ல வண்டி விபத்துக்கு ஏற்பட்டுள்ளதாக பாக்கியாவிடம் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.