நா முக்கியமா இல்ல இவங்க முக்கியமா என கோபியிடம் கேட்ட இனியா.! அதிர்ச்சியில் கோபி..

0
baakiyalakshmi 45
baakiyalakshmi 45

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஏராளமான டுவிஸ்டுகள் இருந்து வருகிறது அந்த வகையில் கோபி ராதிகா இருவரும் தங்கி இருக்கும் வீட்டில் தற்பொழுது இனியா மற்றும் ராமமூர்த்தி இருவரும் இருந்து வருகிறார்கள். இதனால் கோபி ராதிகாவிற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் முதன்முறையாக ராதிகா ராமமூர்த்தி மற்றும் இனியாவிற்காக சமைத்து தருகிறார். அந்த சாப்பாடு நல்லா இல்லை என ராமமூர்த்தி கூறுகிறார் இதனால் ராதிகா கோபியை பார்த்து முறைக்கிறார். எனவே இனியா ராமமூர்த்தி இருவரும் சரியாக சாப்பிடவில்லை இந்த நேரத்தில் ராமமூர்த்தி பாக்யா வீட்டிற்கு சென்று சாப்பிடுகிறார்.

மேலும் பாக்கியா இனியா சாப்பிட்டாளா என கேட்க அவளும் சாப்பிடவில்லை என கூற இனியாவிற்கு சாப்பாடு எடுத்து செல்கிறார் இதனை பார்த்த ராதிகா கோபப்படுகிறார். மேலும் ராதிகா இனியாவிற்காக காபி போட்டு தருகிறார் ஆனால் இனியா அந்த காபியை குடிக்கவில்லை. எனவே ராதிகா இனியாவிடம் நீ இதனை குடிக்கவில்லையா எனக் கேட்க அதற்கு வாயை திறக்காமல் இருக்கிறார் இனியா.

பிறகு ராதிகா உன்கிட்ட தான் பேசுறேன் என கேட்க அதற்கு இனியா உங்களிடம் பேச வேண்டும் என்ற அவசியமில்லை எனக் கூற அந்த நேரத்தில் கோபி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது இனியா என்னிடம் கேள்வி கேட்பதற்கு இவங்க யாரு என கேட்க நான் ஏன் காபி குடிக்கல என்று தான் கேட்டேன் அதற்கு கோபி அவளுக்கு தான் காபி பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல என்ன சொல்ல அதற்கு ராதிகா காபி மட்டுமா பிடிக்கல என்னையும் தானே புடிக்கல என கூறுகிறார்.

உடனே இனியா ஆமாம் உங்களை தான் எனக்கு பிடிக்கவில்லை என கோபமாக கூறுகிறார் இதனால் கோபி அதிர்ச்சி அடைய பிறகு இனியா கோபியிடம் உங்களுக்கு நான் முக்கியமா இவங்க முக்கியமா என கேட்கிறார் இவ்வாறு இவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.