இனியாவால் ராதிகாவிற்கு வந்த சோதனை.! மண்டையை பிச்சிக்க போகும் கோபி.! விறுவிறுப்பில் பாக்யலக்ஷ்மி சீரியல் எபிசொட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இத்தனை நாட்களாக கோபியினால் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வந்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு கோபி படும் பாடுகளை பார்த்து ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக மக்கள் மத்தியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் சீரியலே பாக்கியலட்சுமி தான். இப்படிப்பட்ட நிலையில் இனியா தன்னுடைய அப்பாவுடன் சென்றதால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள் எனவே தன்னுடைய பேத்தியை பார்க்க வேண்டும் என்பதற்காக ராமமூர்த்தியும் கோபியின் வீட்டிற்கு சென்றுள்ளார் அங்கு ராதிகா அனைவருக்கும் சாப்பாடு செய்து வைத்துள்ளார்.

பிறகு ராமமூர்த்தி எப்படி சாப்பிட கூப்பிடுவது என்று தெரியாமல் கோபியிடம் சொல்லி கூப்பிட சொல்கிறார் அதன் பிறகு ராதிகா சமைத்திருக்கும் சாம்பாரை பார்த்துவிட்டு ராமமூர்த்தி இது என்ன கார குழம்பு என கிண்டல் செய்கிறார். கோபிக்கு இந்த சாப்பாடு பிடிக்க கோபி ராதிகாவிடம் சாப்பாடு நல்லா இருப்பதாக கூறுகிறார் ஆனால் இனியாவிற்கும் ராமமூர்த்திக்கும் இந்த சாப்பாடு பிடிக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ராமமூர்த்தி சாப்பாடு நல்லா இல்லை என கூற ராதிகா கோபியை பார்த்து முறைக்கிறார். மேலும் அவர் பாக்கியா சமைத்தால் நன்றாக இருக்கும் எனவும் கூற இதனால் ராதிகா கடுப்பில் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கிடையே விரைவில் சண்டை ஏற்பட இருக்கிறது.

மேலும் இனியாவும் ராதிகாவிடம் பேசாமல் இருந்து வரும் நிலையில் சாப்பாடு பிடிக்காத காரணத்தினால் என்ன சொல்வது என்று தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி போய்க் கொண்டிருக்கும் நிலையில் இவர்களுக்கிடையே சண்டை ஏற்பட‌ இடையில் கோபி மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.

Leave a Comment